இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்துவிட்டது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பாப் பாடகி ரிஹானா இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ரிஹானா 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலம் என்பதால் சில மணி நேரங்களில் அந்த ட்வீட் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பதிவிட்ட 14 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ரீ-ட்வீட், 4 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ள அந்த ட்வீட் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. ரிஹானாவை பின் தொடர்பவர்கள் பலரும் #RihannaSupportsIndianFarmers என்ற ஹேஷ்டேக்கில் தங்களது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
அவரை தொடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், மியா கலிஃபா உள்ளிட்டோர் விவசாயிகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். "இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்," என அவர் தனது ட்விட்டர் பதிவில் கிரெட்டா தெரிவித்திருந்தார்.
We stand in solidarity with the #FarmersProtest in India.
— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
https://t.co/tqvR0oHgo0
இவர்கள் மட்டுமின்றி அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். இப்படியான சூழலில் இந்திய வெளியுறவு அமைச்சகம் யார் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு விளக்க அறிக்கை கொடுத்திருந்தது.
அதில், "இந்தியாவின் சில பகுதிகளில் மிகவும் சொற்பமான விவசாயிகள் மட்டுமே அரசின் சீர்திருத்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதுவரை பதினோரு சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரதமரின் சார்பில் அந்த சட்டங்களைத் தள்ளிவைக்கும் திட்டம் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
#IndiaTogether #IndiaAgainstPropaganda https://t.co/TfdgXfrmNt pic.twitter.com/gRmIaL5Guw
— Anurag Srivastava (@MEAIndia) February 3, 2021
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சச்சின், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரனாவத் உள்ளிட்ட கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் IndiaTogether என்ற ஹேஷ்டேகில் ட்விட்டரில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
சச்சின் டெண்டுல்கர், "இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டினர் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்கக்கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். அவர்கள் இந்தியாவிற்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்" எனப் பதிவிட்டு இருந்தார்.
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda
நடிகர் அக்ஷய்குமார், "இந்தியாவின் மிக முக்கியமான அங்கம் விவசாயிகள். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதி வழியில் இணக்கமான தீர்வு காணும் முயற்சிக்கு நாம் ஆதரவளிப்போம். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிரப் பிளவுபடுத்தும் எவர் மீதும் கவனம் செலுத்தக் கூடாது," என்று கூறியுள்ளார்.
இதற்கு மத்தியில் #IndianFarmersHumanRights, #shameonbollywood, #AntiNationalBollywood என்ற ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.
source https://www.vikatan.com/social-affairs/protest/trending-hashtags-related-to-farmers-across-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக