Ad

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

`பிரதமர் மோடிதான் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கினார்!' - மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர்

புனேயில் பா.ஜ.க-வின் யுவ மோர்ச்சா கூட்டம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கலந்து கொண்டார். இதில் பாட்டீல், ``பிரதமர் நரேந்திரமோடி முஸ்லிம்களிடம் பாரபட்சம் காட்டியதில்லை. டாக்டர் அப்துல் கலாமைக்கூட பிரதமர் நரேந்திர மோடிதான் ஜனாதிபதியாக நியமித்தார்.

சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி, வீர் சாவர்கர், அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் பணிகளைப் புரிந்து கொள்வது அவசியம். நாட்டின் சுதந்திரஒ போராட்டத்துக்கு இளைஞர்கள் பெரிய அளவில் பங்காற்றி இருக்கின்றனர். அதேபோன்று இளைஞர்கள் சமுதாயத்தில் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

அப்துல்கலாம்

நாட்டின் உண்மையான வரலாறு மட்டுமல்லாது கலாசாரத்தைப் பற்றி தற்போதைய சந்ததியினருக்கு எடுத்து சொல்வதில் யுவ மோர்ச்சா முக்கிய பங்காற்றுகிறது’’ என்று தெரிவித்தார்.

அப்துல்கலாம் 2002-ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். அப்போது நாட்டின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி 2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தார். ஆனால், நரேந்திர மோடிதான் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கினார் என்று மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் கூறியிருக்கிறார்.

Also Read: `19 வீடுகள் இருப்பதை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மறைத்துவிட்டார்!’ - பா.ஜ.க குற்றச்சாட்டு

இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்ட மேலவைத் தேர்தல் பிரசாரத்தின் போது சந்திரகாந்த் பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. `அரசியலுக்கு வருவதற்கு முன்பு சரத்பவார் பெரிய தலைவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு தான் அவர் படிக்காத சிறிய தலைவர் என்று தெரிந்து கொண்டேன்’’ என்று சந்திரகாந்த் பாட்டீல் அப்போது பேசியிருந்தது சர்ச்சையானது.



source https://www.vikatan.com/news/politics/maharashtra-bjp-chief-draws-flak-for-claiming-pm-modi-made-abdul-kalam-as-president

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக