Ad

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது?

1சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக, வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெறுவது வழக்கம். சமீபத்தில் இந்தப் பணி முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

இந்தியத் தேர்தல் ஆணையம்

``இறுதி வாக்காளர் பட்டியல் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்துவிட்டு, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலானவுடன், மூன்று வருடங்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இதன்படி, வருவாய்த்துறையில் துணை தாசில்தார் பொறுப்புக்கு மேல் உள்ளவர்கள், காவல்துறையில் ஆய்வாளர் பொறுப்புக்கு மேல் உள்ளவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அவரவர் சொந்த மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதால், தேர்தல் முடியும் வரை அவர்களை வேறொரு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: `கூட்டுறவு விவசாயக் கடன்கள் ரத்து தேர்தல் சுயலாபத்துக்கான அறிவிப்புதான்’ - ஸ்டாலின்

வாக்கு இயந்திரங்களும் மார்ச் மாதமே அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாடின் கீழ் கொண்டுவரப்பட்டு, வாக்குச் சாவடியில் பணியமர்த்தப்படும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஏப்ரல் இரண்டாவது வாரம் வேட்புமனுத் தாக்கலும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு மே முதல் வாரமும் இருக்கும். மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுவதுமாக விலகாததால், `இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தலாமா?’ என்றும் ஆலோசனை நடத்தியுள்ளோம். கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மே 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதேபோல, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் மே மாதம் இறுதியில் வெளியாகும் வாய்ப்புகள்தான் அதிகம். தேர்தல் நடத்தை விதிகள் அமலானதும், புதி16தாக எந்தத் திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது, அரசாணையும் பிறப்பிக்கக் கூடாது என்பதால், தேர்தல் நடத்தும் தேதி குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி தரப்புக்கு தகவல் அனுப்பியிருக்கிறோம்” என்றனர்.

தேர்தல்

சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன், ஜூன் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகிறது. அதனால், முன்கூட்டியே தேர்தலை நடத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், வாக்குச்சாவடி மையங்களாகச் செயல்படும் பள்ளிக்கூடங்களை விடுவிக்குமாறு அரசுக்கு ஆலோசனை அளித்திருக்கிறதாம். இந்த ஆலோசனை தேர்தல் ஆணையத்திடமும் பகிரப்பட்டிருப்பதால், முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலானவுடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் அதிகாரங்கள் குறைந்துவிடும் என்பதால், அரசியல் சூழல் அதன் பிறகு மாறவும் வெகுவாக வாய்ப்பிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/when-will-ec-announce-tn-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக