Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

புதுச்சேரி: வெள்ளத்திலிருந்து வாகனத்தை மீட்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணிக்குத் தொடங்கிய கனமழை சுமார் 8 மணி நேரத்தைக் கடந்து, நேற்று காலையைக் கடந்தும் விடிய விடியக் கொட்டித் தீர்த்தது. சாலை எங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகர் முழுக்க சுமார் பத்தாயிரம் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

புதுச்சேரி வெள்ளத்தில் சிக்கிய ஹசீனாவின் வாகனம்

புதுச்சேரி சண்முகாபுரம் அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனா பேகம். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஹசீனா பேகம் அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சண்முகாபுரம் கோட்டைப் பகுதியை ஒட்டி வாகனங்களை ஓடையில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஹசீனா பேகம், தனது இரு சக்கர வாகனத்தை ஓடையில் நிறுத்தி வைத்திருந்தார்.

Also Read: நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்!

நேற்று காலை எழுந்தபோது கனமழை காரணமாக ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக ஹசீனா பேகம் தனது இரு சக்கர வாகனத்தை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் நிறுத்துவதற்காக முயற்சிததார். அப்போது வெள்ள நீரின் வேகம் காரணமாக இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது. வாகனத்தை பிடித்திருந்த ஹசீனா பேகமும், நிலைதடுமாறி கீழே விழுந்து, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு, அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் வெள்ள நீரில் சிக்கி ஹசீனா பேகம் மாயமானார்.

பலியான ஹசீனா பேகம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். நேற்று காலை முதல் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து ஹசீனா பேகத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறமுள்ள கனகன் ஏரியில் ஹசீனா பேகத்தின் சடலத்தை தன்வந்திரி நகர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கைப்பற்றினர்.



source https://www.vikatan.com/news/death/woman-dead-in-puducherry-floods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக