Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

புதுச்சேரி: `அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டைகள்!’ - ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு, அவருக்கு பதில் அப்பொறுப்பு, தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டது.

அங்கன்வாடி குழந்தைகள்

ஆளுநராக பொறுப்பேற்றது முதல் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வரும் தமிழிசை, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அவ்வகையில், புதுச்சேரி அரசு அங்கன்வாடி குழந்தைகளின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. இனி வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்கான அரசு செலவீனங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

Also Read: புதுச்சேரி: `தடுப்புகள் இனி இருக்காது; என் பாணியே தனி!’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

இதன்மூலம் 28,846 குழந்தைகள் பயன்பெறுவர். அதேபோல ஆண்டொன்றுக்கு சுமார் 1.68 கோடி ரூபாய் புதுச்சேரி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்படிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-3-eggs-a-week-for-anganwadi-children-orders-tamilisai-soundararajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக