Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

மெட்ரோ விரிவாக்கம், தொழில் வழித்தடம்... மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள்?

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த மத்திய `பட்ஜெட் 2021' நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சராக பதவியேற்ற பிறகு, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மூன்றாவது மத்திய பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடம் நிகழ்த்தியிருக்கிறார். இதில் தமிழகத்துக்கு என பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

நிர்மலா சீதாராமன்

Also Read: Union Budget 2021: 1 மணி நேரம் 50 நிமிடம்... பட்ஜெட்டை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்! #LiveUpdates

- நாடு முழுவதும் 13,000 கி.மீ தூரத்திற்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக 11,500 கி.மீ தூரத்துக்கு சாலைப் பணிகள் அமைக்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்க 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை கொல்லம் வரை நவீன வசதிகளுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- நெடுஞ்சாலைப் பணிகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மும்பை - கன்னியாகுமரி வரை புதிய வழித்தடம் அமைக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

நிர்மலா சீதாராமன்

- சென்னையில் 118 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படும். இதற்காக 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/business/budget/union-budget-2021-projects-and-schemes-announced-for-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக