Ad

திங்கள், 16 நவம்பர், 2020

சென்னையில் தொடரும் மழை... உதவி எண்கள் அறிவிப்பு! #LiveUpdates

உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிக்கென தீயணைப்புத் துறை தயார்நிலையில், வைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள 14 ஏரிகள் நிரம்பியுள்ளன. சென்னையில் மழையால் ஏற்படும் சிரமங்களுக்கு மக்கள் 101 மற்றும் 94450 86080 என்ற எண்களில் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகம்!

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

Also Read: சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! - அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சென்னையில் பெய்துவரும் மழையால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. செங்கல்பட்டைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பிய நிலையில், குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

ஆர்.பி.உதயகுமார்

இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு 40 சதவிகிதம் வரை குறைவாகப் பெய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/general-news/17-11-2020-tamilnadu-rains-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக