Ad

திங்கள், 9 நவம்பர், 2020

பிரேசில்: கருத்து வேறுபாடு; விலகிய நிச்சயிக்கப்பட்ட பெண்! - தனக்கு தானே திருமணம் செய்து கொண்ட இளைஞர்

பிரேசிலை சேர்ந்த மருத்துவர்கள் டியாகோ ரபேலோ, வைடெர் புயனோ ஆகியோர் திருமணம் செய்து முடிவெடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்பின் உறவை தொடர்ந்த அவர்கள் இருவரும், இந்த வருடம் அக்டோபரில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் ஜூலை மாதம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனாலும் மணமகன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட அந்த தேதியில் தனக்கு திருமணம் நடக்கவேண்டும் என்று எண்ணியதால், 33 வயதான டியாகோ ரபாலோ தன்னை தானே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.

இதற்காக வடகிழக்கு பிரேசிலில் உள்ள இட்டாகேர் நகரில் ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் தனது திருமணத்தை நடத்த முடிவு செய்த அவர், கடந்த அக்டோபர் மாதம் 17 -ம் தேதி 40 பேர் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்வில் தன்னையே திருமணம் செய்து கொண்டார்.

`கொரோனா நோய் தொற்றால் குறைந்த எண்ணிக்கையிலே உறவினர்கள் கலந்து கொண்டாலும், இந்த நிகழ்வு என்னை மிகவும் மகிழ்ச்சியாக்கிய நிகழ்வு. என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார் டியாகோ ரபேலோ.

மேலும் சமூக வலைத்தளங்களில் டியாகோ ரபேலோ குறிப்பிடுகையில், ``இன்று என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும். ஏனென்றால் இந்த வாழ்க்கையில் நான் மிகவும் நேசிக்கும் நபர்களுடன் நான் இருக்கிறேன். எனக்கான சோகத்தை நான் கொண்டாட நினைத்தேன். ஆனால் நானே அதை நகைச்சுவையாக மாற்றிவிட்டேன்” என்று கூறினார்.

அவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்த படங்கள் அவரை மிகவும் மகிழ்ச்சியானவராக காட்டுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த பதிவில் மருத்துவர் டியாகோ தனது வாழ்க்கையின் ஒரு கஷ்டமான கட்டத்தை சமாளிக்க உதவிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இன்னொரு பதிவில் அவர் தனது முன்னாள் காதலிக்கு நன்றி தெரிவித்ததோடு, "நான் உங்களை மதிக்கிறேன்... நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்லவும், நீங்கள் விரும்பும் இடத்தில் தங்கவும் நீங்கள் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும்" என்றும், உங்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/news/miscellaneous/man-marries-himself-after-fiances-last-minute-refusal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக