Ad

சனி, 14 நவம்பர், 2020

`தேர்தலில் ஜெயித்தாலும் அண்ணா காத்த கண்ணியம்' - தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த காமராஜரின் வியூகம்!

தேர்தல் ஜனநாயகத்தில் மாபெரும் தலைவர்களை எதிர்த்து மிக எளிய வேட்பாளர்களை நிறுத்துவது ஆரோக்கியமான ஒன்று. இதன் மூலம், எளியவர்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவும் ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. ஆனால், தேர்தல் மற்போரில் தலைவர்களை எதிர்த்து தோற்றுப்போன எளியவர்கள் ஏராளம். எதிர்பாராதவிதமாக தலைவர்களைத் தோற்கடித்து சட்டமன்றத்துக்குள் கால்பதித்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்போம்.

காமராஜர், அண்ணா

1967 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த நேரம் அது. விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் காமராஜர் தோற்றதாகத் தகவல் வந்தபோது, மிகுந்த வேதனையில் இருந்தார் அண்ணாதுரை. ``காமராசர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்" என மனம் வெதும்பிச் சொன்னார். அதேநேரம், ஆட்சி சிம்மாசனத்தில் கால்பதித்த உற்சாகத்தில் இருந்த தம்பிகளுக்கும் ஓர் அறிவுரையைக் கூறினார். ``நமது வெற்றியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி எனக் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது. கொண்டாட்டங்களைக் கொஞ்ச நாள் தள்ளிப்போடுங்கள்" என்றார். ஆனால், அடுத்து வந்த தேர்தல்களில் இதே கண்ணியத்தோடுதான் கழகங்கள் தேர்தல்களை எதிர்கொண்டனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

1957-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 15 இடங்களைக் கைப்பற்றியிருந்தது தி.மு.க. அடுத்துவந்த 1962 தேர்தலில் அண்ணாதுரை உட்பட 15 எம்.எல்.ஏ-க்களையும் தோற்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கினார் காமராஜர். அப்போது, ஈ.வெ.கி.சம்பத் தி.மு.க-விலிருந்து வெளியேறி, `திராவிட நாடு பகல் கனவு' என்ற பிரசாரத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தார். இதைத் தங்களுக்குச் சாதகமான ஒன்றாகப் பார்த்தது காங்கிரஸ். அந்தத் தேர்தலில், அண்ணாதுரை போட்டியிட்ட காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியும், ஈ.வெ.கி.சம்பத் போட்டியிட்ட தென்சென்னை மக்களவைத் தொகுதியும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தன.

முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன்

ஈ.வெ.கி.சம்பத்துக்கு எதிராக தி.மு.க சார்பாக நாஞ்சில் மனோகரன் களமிறங்கினார். ராஜம் ராமசாமி என்பவர் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தில், `சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிறேன்' எனக் கருவினார் சம்பத். அதற்கு பதிலடி கொடுத்த நாஞ்சில் மனோகரன், `எனக்கு நாடாளுமன்றத்தில் ஒரு நாற்காலி தயாராகிவிட்டது' என்றார். `சம்பத் போட்டியிடுவதால், தி.மு.க வாக்குகள் பிரிந்து காங்கிரஸ் ஜெயிக்கும்' என்று கணக்கு போட்டார் காமராஜர். முடிவில், நாஞ்சில் மனோகரன் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் நாஞ்சிலாருக்காக தி.மு.க-வினர் கடுமையாக வேலை பார்த்ததும் ஒரு காரணமாக அமைந்தது.

---> அண்ணாவைத் தோற்கடிக்க காமராஜர் வகுத்த வியூகம் என்ன?

---> அண்ணாவை வீழ்த்திய திருப்பதி வெங்கடாசலபதி படம்?

---> ஒற்றைப் புகைப்படத்தால் நிலைகுலைந்த தி.மு.க. ஏன்?

கூடுதல் தகவல்களுக்குக் கீழ்க்காணும் வீடியோவைப் பாருங்கள்..!



source https://www.vikatan.com/government-and-politics/election/story-about-anna-and-kamarajar-in-tn-election-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக