Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

`அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!’- மு.க.ஸ்டாலின் #NowAtVikatan

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!

மத்திய அரசுக்கு தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா? அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் - ஆளுநர் - துணைவேந்தர் ரகசியக் கூட்டணியா?’’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

துணைவேந்தர் சூரப்பா

மேலும், ``இடஒதுக்கீட்டுக்கும், மாநில நிதிஉரிமைக்கும் விரோதமாக, மத்திய அரசுக்கு, தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

Also Read: ’`ஆன்லைன்’ வார்த்தை எங்கே?!’ - மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியா - கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,20,539 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 66,732 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 816 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,150 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 61,49,535 பேர் குணமடைந்துள்ளனர்.

Also Read: கொரோனா: உயிரிழந்த 200 பேரின் இறுதிப் பயணம்; உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - தொற்றால் உயிரிழந்த சோகம்



source https://www.vikatan.com/news/general-news/12-10-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக