கொரோனா நோய் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. நாட்டு மக்களிடம் நேற்று பிரதமர் மோடி பேசும் போதும், விரைவில் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்ரு தெரிவித்தார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், ``கொரோனா தடுப்பு மருந்துக்கு முழு அனுமதி கிடைத்ததும், முதற்கட்டமாக 3 கோடி மருந்துகள், முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இதில் சுமார் 70 லட்சம் மருத்துவர்களும், துணை மருத்துவர்களும் அடக்கம். மேலும் இதில் 2 கோடி முன்கள சுகாதார ஊழியர்களும் அடங்குவர்” என்றார்.
Also Read: `சிறு தவறும் நமது இயக்கத்தை நிறுத்திவிடும்..!’ - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
தொடர்ந்து பேசியவர், ``3 கோடி தடுப்பு மருந்து வழங்குவதற்கான உள்கட்டமைப்பு நாட்டில் ஏற்கனவே உள்ளது. தடுப்பு மருந்தை நிர்வகிப்பது குறித்து தேசிய நிபுணர் குழுவுடன் ஆலோசித்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். அடுத்த வரும் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளின் அளவை கொண்டு, யாருக்கு முதலில் வழங்கலாம் என்ற முன்னுரிமை பட்டியலை தயாரிக்கிறோம்.
தற்போது சோதனையில் இருக்கும் மருந்துகள் திட்டமிட்டப்படி வெற்றிபெற்றால், முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதத்தில் கிடைத்துவிடும் என்றார். மேலும் அவர் `கொரோனா தடுப்பூசி கிடைத்த பிறகும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பை மக்கள் குறைக்க முடியாது” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/frontline-workers-to-get-the-vaccine-first-says-central-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக