Ad

சனி, 10 அக்டோபர், 2020

நாகை: தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா பா.ஜ.க?! - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 111 பயனாளிகளுக்கு தமிழக கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார், அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு இருப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

ஓ.எஸ்.மணியன்

" தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, கழகத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றியை உறுதிபடுத்திடும் வகையில் அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியை எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

தொடர்ந்து, ``அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.,வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு செல்ல வாய்ப்புண்டு என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?" என்ற கேள்விக்கு, "அதாவது.. அண்ணா சொன்னார்... கல்யாண வீட்டிற்கு சாப்பிட வந்தவர் வீட்டில் உள்ள அடுப்பை இடிச்சிட்டு வர்றதில்ல. கல்யாண வீட்டுக்கு வர்றவங்க ஒருவேளை சாப்பிடுவாங்க. அதன்பின் அவுங்க வீட்டு அடுப்புல சமைச்சி சாப்பிடுவாங்க. அப்படிதான் கூட்டணி. இது எங்களுக்கும் மற்ற எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். அவுங்க கட்சியை வளர்க்கிறதுக்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்வாங்க” என்றார்.

ஓ.எஸ்.மணியன்

தி.மு.க.வில் இணையதள வழியாக உறுப்பினர் சேர்க்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது. 2021 தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு என்கிறார்களே என்ற கேள்விக்கு, ``இன்னும்கூட பல பூஜ்ஜியங்கள வலது பக்கத்தில் போட்டுக்கலாம். அது அவுங்க சுதந்திரம்" என்றார். கூட்டணி கட்சிகள் மாறுவதற்கு வாய்ப்புண்டா என்று கேட்கிறீர்கள், "கண்ணு மாறாமல் இருந்தால் காட்சிகள் மாறாது. கண்ணுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் காட்சிகள் மாறும்" என்று முடித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-the-bjp-go-for-the-dmk-alliance-minister-os-maniyan-answers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக