Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

இந்த 6 முறையும் சரியாக கை கழுவுகிறீர்களா? ஒரு வழிகாட்டல் #GlobalHandwashingDay2020

வ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் நாள் உலகளாவிய கைகழுவும் தினமாக (Global Handwashing Day) அனுசரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கைகளின் மூலமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவ அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட பிறகு மக்களிடையே `கை சுகாதாரம்' முக்கியத்துவம் பெற்றது.

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

கைகளைக் கழுவ சோப், ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிட்டைஸர் என்று வெவ்வேறு விதமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக கைகளைத் தூய நீரில் 20 விநாடிகள் கழுவ வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எப்போதெல்லாம் மற்றும் எந்தெந்த முறைகளில் கைகளைக் கழுவ வேண்டும் என்று மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் கூறும் டிப்ஸ் இதோ...

1. உணவு உண்பதற்கு முன்பும், பின்பும்
Food
2. கழிவறையைப் பயன்படுத்திய பிறகு
Toilet
3. வெளியில் சென்று ஏதாவது பொருள்களை வாங்கிவந்த பிறகு
Patient in hospital
4. நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று பார்த்து வந்தபிறகு
Pet
5. செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு
6. அசுத்தமான பொருள்களைக் கையாண்ட பிறகு
handwash

எந்த முறைகளில் கைகளைக் கழுவ வேண்டும்?

7. குழாயிலிருந்து வேகமாகக் கொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீரில் கைகளை 20-30 விநாடிகள் கழுவ வேண்டும்.
washing hands
8. கைகளைக் கழுவ சோப் உபயோகிப்பதைக் காட்டிலும் லிக்யூட் சோப்பே சிறந்தது.
9. கைகளைக் கழுவும்போது முதலில் இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.
Hand sanitizer
10. வலது புறங்கையை இடது புறங்கையாலும், இடது புறங்கையை வலது புறங்கையாலும் மாற்றி மாற்றித் தேய்க்க வேண்டும்.
11. பின்பு விரல்களின் இடுக்குகளை நன்றாக அழுத்தித் தேய்த்துக் கழுவ வேண்டும்.
Hands
12. நகக் கண்களிலும் சோப் பயன்படுத்தி அழுக்குகள் போக நன்றாகக் கழுவ வேண்டும்.
hand wash
13. பிறகு கைகளின் இரண்டு கட்டை விரல்களையும் கீழ்நோக்கிப் பிடித்து அவற்றைச் சுற்றியும் நன்றாகத் தேய்க்க வேண்டும்.
Hand sanitizer
14. இறுதியாக இரண்டு மணிக்கட்டுகளையும் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் 4-5 விநாடிகள் செய்ய வேண்டும்.


source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-when-and-how-to-wash-your-hands

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக