ஸ்ரீஹரி கோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்டவுனுக்குக் குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவிய நிகழ்வு முதல் பல பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவிய நிகழ்வு வரை கடந்த ஆறு வருடமாக மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக வளர்மதி பணியாற்றியிருக்கிறார். 2012-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட RISAT-1 திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு இருக்கிறார். தனது கம்பீரமான குரலுக்காக பலராலும் பாராட்டப்பட்டவர்.
சமீபத்தில் சந்திரயான் 3, லேண்டர் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்து இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்தது. அந்த சந்திரயான் 3 விண்கலத்திற்கும் கவுன்டவுன் குரல் கொடுத்தவர் வளர்மதிதான். அவரின் மறைவுக்கு விஞ்ஞானிகள், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வளர்மதியின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ இயக்குநர் டாக்டர். வேங்கட கிருஷ்ணன், “ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுன்டவுன்களுக்கு வளர்மதி மேடத்தின் குரல் இனி இருக்காது. சந்திரயான் 3 அவரது இறுதி கவுன்டவுன் அறிவிப்பு. எதிர்பாராத மரணம் இது. மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/science/astronomy/isro-scientist-valarmathi-passes-away
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக