திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் வழியாக தங்கக் கடத்தல் செய்வதென்பது சகஜமானதொரு நிகழ்வாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து, திருச்சி விமானம் வழியாக அதிகளவு கடத்தல் தங்கம் இறங்குகிறது என்கிறார்கள் அதிகாரிகள். விமான நிலையத்தில் நடைபெறும் சோதனையின்போதும், அதிகாரிகளுக்குக் கிடைக்கும் ரகசியத் தகவல்களின் அடிப்படையிலும், கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபட்டும் வருகிறது. ஆனாலும், தங்கக் கடத்தலை கைவிடுவேனா என்று, டிஸைன் டிஸைனாக நூதன வழிகளில் தங்கக்கடத்தலை அரங்கேற்றி வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்கூட் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளை, வழக்கம்போல அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஆண் பயணி ஒருவரை அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அயன் பட பாணியில், தங்கத்தை பேஸ்ட் வடிவில் கேப்ஸ்யூலில் வைத்து, ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. கிட்டத்தட்ட 260 கிராம் அளவு எடையுடையதாக அந்தத் தங்கம் இருந்திருக்கிறது. கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.15.47 லட்ச ரூபாய் ஆகும்.
அதையடுத்து அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அந்தத் தங்கத்தைக் கடத்தி வந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
source https://www.vikatan.com/crime/smuggling-gold-caught-in-trichy-airport
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக