`என் மண், என் மக்கள்’ யாத்திரையை தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று மாலை அண்ணாமலை தொடங்கினார்.
கொங்கப்பட்டியிலிருந்து உசிலம்பட்டி முருகன் கோயில் வரை, 2 கிலோ மீட்டர் தூரம் நடந்துவர, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து முத்துராமலிங்க தேவர், மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர், பின்பு முருகன் கோயில் முன்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "சரித்திரம் பெற்ற உசிலம்பட்டி மண்ணில் பேச வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. நாட்டார் வழிபாட்டைக் கொண்ட மக்கள் இங்குள்ளவர்கள். இப்பகுதியில் உள்ள எட்டு நாட்டில் வசிக்கும் மக்கள் ஆண்டவனுக்கும், சத்தியத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.
உலகையே ஆண்ட ஆங்கிலேயர்கள், வரி கொடுத்து வாழ்ந்தது இந்த மக்களிடம் மட்டுமே. இந்த குல தெய்வ வழிபாட்டு முறையை, சனாதன முறையை வேரறுக்க ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அந்த கூட்டத்தை பார்த்து நீங்கள் எப்படி மௌனமாக இருக்கிறீர்கள்? முத்துராமலிங்க தேவர் மட்டும் இப்போது இருந்தால் இப்படி பேசுவார்களா? அந்த காலத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் கடவுள் இல்லையென்று பேசிய அண்ணாவின் வாயை மூட வைத்தவர் முத்துராமலிங்க தேவர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், தேனித் தொகுதியில் பாஜக-வைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக வரும்போது உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அருகே நீங்கள் விரும்பும் நேதாஜிக்கு சிலை வைப்போம்.
சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத மக்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்கிறோம். ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள், அதற்கு பதிலாக திமுக-வினர் வந்துவிட்டார்கள்.
முளைச்சு மூணு இலை விடல, அவர் நடித்த எந்த படமும் ஓடல, அவர் அப்பாவின் காசில் கொழுத்து போய் திரியும் இவர் சனாதனத்தை ஒழிக்க போகிறாராம். கொசுவை ஒழிப்பது போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளார். தமிழகத்தில் ஒழிக்க வேண்டியது, டி என்ற டெங்கு, எம் என்ற மஸ்கிட்டோ, கே என்ற கொசு என்கிற திமுக-வைத்தான்.
வீரம் விளைந்த உசிலம்பட்டி மண்ணில் ஒருமுறை கூட திமுக வென்றது இல்லை, உசிலம்பட்டி மக்கள் இவர்களை போன்றோரை உள்ளே விட மாட்டார்கள். அதேபோன்று 2024-ல் தேர்தலிலும் திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-speech-at-usilampatti-yatra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக