கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பாலமலை காட்டுப்பகுதியில் கொடூரமான முறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த க.பரமத்தி காவல் நிலைய போலீஸார், கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண், ஈரோடு மாவட்டம், கொடுமுடி சோளக்காளிபாளைத்தைச் சேர்ந்த ரூபா என்பதை கண்டறிந்தனர். அதோடு, ரூபா தி.மு.க பேரூராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் இருந்த தீபாவின் உடல் கடந்த 26 -ம் தேதி மீட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், ரூபாவை கொலை செய்தவர்களை கண்டுப்பிடிக்க, அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அதோடு, க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து, வழக்கு பதிந்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு, கொலை செய்யப்பட்ட தி.மு.க கவுன்சிலர் ரூபாவின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே விசாரணையில், தினந்தோறும் கரூருக்கு வரும் பேருந்தில் ரூபாவுடன் பயணிக்கும் நித்யா என்ற பெண், கொலை செய்யப்பட்ட ரூபாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி பவுத்திரம் பாலமலை பகுதிக்கு அழைத்துச் சென்று, சென்று 7 சவரன் தங்க செயின், தோடு, வெள்ளி, கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. நித்யாவின் கணவர் கதிர்வேல் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததோடு, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததாக அவரையும் கைது செய்து கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தி.மு.க கவுன்சிலர் ரூபா வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸார் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ததால், கரூர் காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். நகைக்காக தன்னோடு பேருந்தில் பயணிக்கும் பெண் கவுன்சிலர் ரூபாவை மற்றொரு பெண் தனது கணவரோடு சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/crime/in-karur-a-dmk-councillor-killed-and-a-couple-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக