Ad

வியாழன், 14 செப்டம்பர், 2023

Tamil News Today Live: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல், இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. தமிழ்நாட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட, புதுச்சேரியிலும், கர்நாடகாவிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட, தமிழ்நாட்டில் இந்த திட்டம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

இந்நிலையில் தான் இத்திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் தகுதியான பெண்கள் என கணக்கெடுக்கப்பட்டு, இந்த திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக 10 ஆயிரம் பயனாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் விழாவில் பங்கேற்கின்றனர். சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோடம்பாக்கத்திலும், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொளத்தூரிலும் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-news-today-live-updates-dated-on-15-09-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக