Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

``நான் கோயிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை செய்தேன்!” - சித்தராமையா கூறும் காரணம் என்ன?

தி.மு.க அமைச்சர் உதயநிதி, `கொரோனா, டெங்குபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என்று பேசியதை, பா.ஜ.க., வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதில், மத்திய அமைச்சர்கள் உட்பட பா.ஜ.க தலைவர்கள் உதயநிதியைக் கண்டித்து மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தினர். வடமாநில காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் பதியப்பட்டன, கொலை மிரட்டல்களும் வந்தன. இருப்பினும், தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை, எதையும் சந்திக்கத் தயார் என உதயநிதி வெளிப்படையாகக் கூறி வருகிறார்.

முதல்வர் சித்தராமையா - கர்நாடகா

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நான் கோயிலுக்குச் செல்லக் கூடாது என முடிவு செய்தேன் எனக் கூறியது பேசுபொருள் ஆகியுள்ளது. சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் 169-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா, "ஒருமுறை கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தபோது, என்னைச் சட்டையைக் கழற்றி உள்ளே வரச் சொன்னார்கள். கோயிலுக்கும் நுழைய வேண்டாம் என முடிவு செய்தேன்.

மேலும், நான் கோவிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை செய்கிறேன் என்று சொன்னேன். அந்தக் கோயிலில் எல்லோரையும் சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. ஒரு சிலரையே இப்படி நடத்தினார்கள். இது மனிதாபிமானமற்ற நடைமுறை, கடவுள் முன் அனைவரும் சமம்" எனப் பேசினார். தற்போது இதுவும் பேசுபொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



source https://www.vikatan.com/government-and-politics/politics/i-went-to-a-temple-in-kerala-they-asked-me-to-take-off-my-shirt-said-siddaramaiah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக