செப்டம்பர் 14-ந் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று இந்தி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. விடுதலைப் போராட்ட காலம் முதல் தற்போது வரை நாட்டை ஒன்றுபடுத்துவதில் இந்தி முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாகவும் இருக்கிறது.
அனைத்து பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும். ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.
தற்போது இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடி ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த அந்தப் பதிவில், “ உங்களுக்கு இந்தி தெரியும் என்பதால் நீங்கள் இந்தி பேசுகிறீர்கள். எங்களையும் இந்தி பேசும்படி சொல்கிறீர்கள்.
ஏனென்றால் உங்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். #StopHindiImposition என்று பதிவிட்டு அமித்ஷாவின் கருத்துக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
source https://cinema.vikatan.com/kollywood/actor-prakash-raj-responds-to-union-home-minister-amit-shahs-comment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக