கொல்கத்தாவின் ஹரிதேவ்பூரில் பார்வையற்றோர், ஆதரவற்றோருக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கிவந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனத்திலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குச் சிறுமி ஒருவர் தொடர்புகொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஹரிதேவ்பூர் காவல் நிலையத்துக்கு தகவலளித்திருக்கிறது.
உடனே காவல்துறை, அந்தக் குறிப்பிட்ட ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று சோதனையிட்டிருக்கிறது. அதில் இரண்டு சிறுமிகள் சுமார் 10 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு சிறுமி, பாலியல் சீண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, அந்த ஆதரவற்றோர் விடுதியிலிருந்த குழந்தைகள் பாதுகாப்பான மற்றோர் இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தப் புகார் தொடர்பாக, அந்த விடுதியின் இயக்குநரும், அந்தக் கட்டடத்தின் உரிமையாளரும், அவரின் மனைவியும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் புகார் குறித்து தீவிர விசாரணைக்குப் பிறகு வழக்கு பதிவுசெய்யப்படும் என காவல்துறை தரப்பு விளக்கமளித்திருக்கிறது. பாதுகாக்க வேண்டிய இடமே நரகமான இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
source https://www.vikatan.com/crime/kolkata-child-home-care-direction-arrested-for-child-rape-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக