Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

Marimuthu: "ஆசையா கட்டுற வீட்டுல ஒரு நாள் கூடத் தங்காம..."- மாரிமுத்து குறித்து `எதிர்நீச்சல்' சத்யா

`எதிர்நீச்சல்' மாரிமுத்துவின் உடல் அவர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. சென்னை விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அவர் உடல் திரைத்துறையினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மாரிமுத்து சமீபத்தில் விகடனுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டியில் அவருடைய கடந்த கால வாழ்க்கை குறித்தும் எதிர்நீச்சல் தொடர் இன்னும் 1500 எபிசோடிற்கு மேல் போகும் என்றும் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார்.

மாரிமுத்து இறுதிச் சடங்கு

மனதில் பட்டதை கொஞ்சமும் தயங்காமல் வெளிப்படையாய் பேசுபவர். அவருடைய மரணம் நிச்சயம் பேரிழப்புதான். அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகிலேயே 'எதிர்நீச்சல்' டீம் மொத்தமும் கண்ணீர்மல்க அமர்ந்திருந்தனர். இறுக்கமாக கண்ணீர்மல்க அவர்கள் அனைவரும் அங்கே உட்கார்ந்திருந்தனர். 

'எதிர்நீச்சல்' தொடரில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சத்யா தேவராஜன் மாரிமுத்து மறைவு குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,

"இப்பவும் யாராவது என்னை எழுப்பி இது ஒரு கனவுன்னு சொல்ல மாட்டாங்களான்னு நம்பிட்டு இருக்கேன்...
மாரிமுத்து

அண்ணே... ஏன் இவ்ளோ சீக்கிரம் விட்டுட்டு போனீங்க? ஆதிரை தங்கம், தங்கச்சின்னு ஒரு நாளைக்கு முன்னாடி கூட போன்ல பேசினதெல்லாம் கூட இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு. இந்த மாசம் முழுக்க உங்க செட்டியூல் மொத்தமும் சொன்னீங்களே... ஆனா இப்படி விட்டுட்டு போவீங்கன்னு என்கிட்ட ஏன் சொல்லல... என்ன அவசரம் அப்படி? ஆசையா கட்டுற வீட்டுல ஒரு நாள் கூடத் தங்காம...? வாழ்க்கை முற்றிலும் நியாயமற்றது!

உங்களுடைய பர்ஃபெக்‌ஷனும், வேலை மீதுள்ள உங்க டெடிகேஷனும் எப்பவும் எனக்கு இன்ஸ்பிரேஷன்! எனக்கு நீங்க உங்களுடைய கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் வேலை பார்த்தது சர்ப்ரைஸாக இல்ல.

மாரிமுத்து

கடைசியா எப்பவும் உங்களை கூப்பிடுற மாதிரி, 'எப்பா ஏய்ய்ய்!' நிஜமா உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன். எங்க இதயத்தில் இருந்து உங்களை யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



source https://cinema.vikatan.com/television/ethirneechal-serial-sathya-devarajan-post-about-marimuthus-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக