சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமனி, தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், "உங்கள் மத்தியில் இப்போது ஒரு உண்மையை நான் சொல்கிறேன். எனக்கு தி.மு.க.ஆட்சியில் பிரச்னை ஏற்பட்ட போது என்னை பாதுகாத்தவர் அண்ணன் எஸ்.பி.வேலுமணி தான். 21 நாள்கள் என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்றாரென்று எனக்கு மட்டும்தான் தெரியும். தொண்டர்களுக்கு தோழனாக உழைக்கக்கூடிய அண்ணன் வேலுமணிதான் எனனையும் பாதுகாத்தார். தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
எங்கு பார்த்தாலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலம் திமுக-வுக்கு இறங்குமுகம். அ.தி.மு.க-வுக்கு ஏறுமுகம். ஆகவே நாளை ஆட்சி நமதே எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதி. தி.மு.க.வின் நடவடிக்கை இன்றைக்கு கேலி கூத்தாகிவிட்டது. தி.மு.க-வுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட தி.மு.க.வினர் அலறுகின்றனர்" எனப் பேசினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி பேசுகையில், "தி.மு.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசக்கூடியவர் கே.டி. ராஜேந்திரபாலாஜி. செய்யாத குற்றத்திற்காக அவரை தி.மு.க. அரசு பழி வாங்கியது. ஒன்றுமே செய்யாத கே.டி.ராஜேந்திர பாலாஜியை கொலை குற்றவாளி போன்று போலீஸார் தேடினர். பொய் வழக்கு போடுவதையே தி.மு.க. தொழிலாக கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் உறுதுணையாக இருப்பார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. எந்தத் தேர்தல் வந்தாலும் விருதுநகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக மாபெறும் வெற்றி வாகைசூடும். ஏழு தொகுதிகளும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். மதுரை மாநாட்டிற்கு பிறகு மிகப்பெரும் எழுச்சியை அதிமுக பெற்றுள்ளது. எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தத் திட்டமும் கொடுக்காமல் ஒட்டு மொத்த தமிழக மக்களையும் ஏமாற்றி வருகின்றார். ஒட்டுமொத்த மக்களும் தற்போது எடப்பாடியார்தான் முதலமைச்சராக வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்" என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
source https://www.vikatan.com/government-and-politics/politics/sivakasi-admk-executive-meeting-ex-minister-kt-rajendra-balaji-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக