முடிவுக்கு வருகிறதா டெல்லி விவசாயிகள் போராட்டம்?!
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட தங்களின் மற்ற 6 கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என அறிவித்திருந்தனர் டெல்லியில் போராடும் விவசாயிகள். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. இதையடுத்து விவசாயிகள் இன்று மதியம் 2 மணிக்கு சிங்கு எல்லையில் ஒன்றுகூடிப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவிருக்கின்றனர். அரசுடன் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-08-12-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக