தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University) கீழாக, சென்னை, வாணியன்சாவடியில் செயல்பட்டு வரும் மீன்வள உயிர்த்தொழில்நுட்ப நிறுவனத்தில் (Institute of Fisheries Biotechnology) சுயநிதி ஆதரவில் (Self – Supporting) நடத்தப்பெற்று வரும் மீன்பிடி நிறுவன மேலாண்மை குறித்த முதுநிலை வணிக மேலாண்மை - (M.B.A - Fisheries Enterprises Management) பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கல்வி மற்றும் வயதுத் தகுதிகள்
மீன்பிடி நிறுவன மேலாண்மை குறித்த, நான்கு பருவங்களைக் கொண்ட இரண்டு ஆண்டு கால அளவிலான முதுநிலை வணிக மேலாண்மைப் பட்டப்படிப்பில் (M.B.A - Fisheries Enterprises Management) மொத்தம் 30 இடங்கள் இருக்கின்றன. இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு, கலை, அறிவியல், வணிகம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் மருத்துவம் என்று ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளின் படியிலான பொதுப்பிரிவு – 31%, பிசி – 26.5%, பிசிஎம் – 3.5%, எம்பிசி / டிஎன்சி – 20%, எஸ்சி – 15%, எஸ்சிஏ – 3%, எஸ்டி - 1% என்கிற நடைமுறையினைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களின் குழந்தைகள், முன்னாள் படைவீரர் குழந்தைகள் போன்ற பிரிவினருக்கும் குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.
Also Read: மருத்துவம் சார்ந்த பணிகளுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகள்... விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல்!
விண்ணப்பம்
மேற்காணும் முதுநிலை வணிக மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பல்கலைக்கழகத்தின் www.tnfu.ac.in இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் (Online Application) விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750/-, பிற பிரிவினர்கள் ரூ.1500/- என்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இணையத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 28-11-2021.
மாணவர் சேர்க்கை
விண்ணப்பித்த மாணவர்கள் தேவையான கல்வித்தகுதியான இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தரப்பட்டியலின் படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். 10-12-2021 அன்று மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பெறும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1000/-, பிற பிரிவினர்கள் ரூ.2000/- என்றும் கலந்தாய்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கல்வித்தகுதிக்கான இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், கலந்தாய்வு, நேர்காணல் வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 13-12-2021 முதல் வகுப்புகள் தொடங்கும்.
கல்விக்கட்டணம்
முதுநிலை வணிக மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு (M.B.A. - Fisheries Enterprises Management) சுயநிதிக் கல்விக் கட்டணாமாக பருவம் ஒன்றுக்கு ரூ40,000/- செலுத்த வேண்டியிருக்கிறது. இக்கட்டணத்துடன் சேர்த்து முதல் பருவத்திற்கு ரூ.57425/- என்றும், 2-வது பருவத்துக்கு ரூ.53450/- என்றும், 3-வது பருவத்துக்கு ரூ.55100/- என்றும், 4-வது பருவத்துக்கு ரூ.52950/- என்றும் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விடுதிச் சேர்க்கைக்கு ரூ.10000/- வைப்புத் தொகையாகப் பெறப்படுகிறது. உணவு விடுதிக்கான கட்டணம் பங்கீட்டு முறையில் செலுத்த வேண்டியிருக்கும்.
கூடுதல் தகவல்கள்
மேலும் கூடுதல் தகவல்களை அறிய, www.tnfu.ac.in எனும் இணையதளத்திலிருந்து இப்படிப்பிற்கான தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம் அல்லது திட்ட இயக்குநர், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மீன்வள மேலாண்மைப் புலம், வாணியன்சாவடி, சென்னை எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 09791187737 எனும் அலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டோக் கூடுதல் தகவல்களைப் பெறலாம். jayaraman@tnfu.ac.in எனும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டும் கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
source https://www.vikatan.com/news/education/how-to-apply-for-mba-in-fisheries-enterprises-management-studies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக