சென்னையில் விடிய விடிய கனமழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை காரணமாகச் சாலையில் தேங்கியிருக்கும் நீர்
இடம்: அரும்பாக்கம்; சென்னை
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
தொடர் மழை காரணமாகச் சாலையில் தேங்கியிருக்கும் நீர்
இடம்: கிண்டி; சென்னை
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். புழல் ஏரியிலிருந்து காலை 11 மணிக்கு உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/tamilnadu-rain-alert-and-07-11-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக