"முல்லைப்பெரியாறு அணையை பார்வையிடுவதற்கான தேவை அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்படவில்லை, கேரள அரசை கேள்வி கேட்க தைரியம் இல்லாமல், அமைச்சர் துரைமுருகன் தற்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 9-ம் தேதி நடத்தவுள்ள ஆர்பாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
"முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க அனுமதி பெற்று தந்த ஜெயலலிதாவின் ஆன்மா திமுகவை மன்னிக்காது. தமிழர்களின் உரிமைகளை காக்க தவறிய திமுக அரசு கையாளாகாத அரசாக உள்ளது. கேரள அரசை கேள்வி கேட்க தைரிமில்லாத அமைச்சர் துரைமுருகன், தற்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார். காழ்ப்புணர்வுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை வசைபாடியுள்ளார். நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார் துரைமுருகன்.
அதிமுக அரசு ஏன் அணையை ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி கேட்க அவருக்கு அருகதை இல்லை. அப்போது ஆய்வு செய்ய வேண்டிய தேவையே இருக்கவில்லை.
இப்போதுதான் அதற்கான தேவை இருக்கிறது. 2018-ல் இடுக்கி அணை திறக்கப்பட்ட விவகாரத்தில் கேரள அமைச்சர்கள் அத்துமீறி நடந்து கொண்ட போது தடுத்தது அதிமுக அரசு. சுதந்திர இந்தியாவில் இன்னொரு மாநில விவகாரத்தில் இன்னொரு மாநிலம் தலையிட்டதாக வரலாறு உள்ளதா?
விதிப்படிதான் அணை திறக்கப்பட்டது என்றால், அதை ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை? முதலமைச்சர் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை?
மக்கள், திமுக அரசை இப்போது காறி துப்புகிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை பார்த்து, இதேபோல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழகத்தின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது என அரசை எச்சரிக்கிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/sellur-raju-slams-minister-durai-murugan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக