Ad

ஞாயிறு, 23 மே, 2021

வைகாசி பிரம்மோற்சவம்: காளிகாம்பாள் திருக்கோயிலில் உலக நன்மைக்காக நாள்தோறும் சங்கல்பம்!

அன்னை பராசக்தி காளிகாம்பாளாகக் கோயில்கொண்டு அருளும் தலம் வடசென்னையில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு பிரம்மோற்சவம் 16.5.21 அன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.

காளிகாம்பாள் திருக்கோயில் புராண மற்றும் வரலாற்றுச் சிறப்பினை உடைய திருக்கோயில். இங்கு அன்னை காமாட்சியே காளிகாம்பாளாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் அன்னை காளிகாம்பாள். அன்னையின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்பவ மலரும் ஏந்தித் திருக்காட்சி அருள்கிறாள்.

இடது கையில் வரத முத்திரையுடன் அருள்புரிந்தபடியே வலது கால் தாமரையில் வைத்தபடி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். அன்னை காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அவளின் திருப்பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இந்தத் தலத்தில் வேண்டுவன அனைத்தும் குறைவின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இந்தத் தலம் புராணங்களில் பரதபுரி, சொர்ணபுரி என்றெல்லாம் போற்றப்படுகிறது. இந்திரன், குபேரன் ஆகியோர் மட்டுமல்லாமல் நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜன்ம புண்ணியங்களை அடைந்தனர் என்கிறது தல புராணம்.

முற்காலத்தில் மீனவ மக்கள் வழிபடும் நெய்தல் நிலக் காமாட்சியாக அன்னை திகழ்ந்தாள். அன்னைக்கு அவர்கள் செந்தூரம் சாற்றி வழிபட்டனர் என்கிறது தல வரலாறு. இந்தத் தலத்துக்கு வந்து அன்னைக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அந்த மஞ்சளைப் பயன்படுத்தி வந்தால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணவரமும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்குக் குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

இத்தகைய அற்புதமான திருத்தலத்தில் இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஆகம விதிப்படி நடைபெற வேண்டிய உற்சவங்கள் யாவும் நடைபெற்றுவருகின்றன.

காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்

கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் காலை மாலை இருவேளையும் அம்பாள் பல வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமான கிண்ணித் தேர் தேரோட்டம் இன்று மாலை தனுர் லக்னத்தில் நடைபெறும். நாளை 25.5.21 அன்று காலை நடராஜர் உற்சவமும் மாலை தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கமும் நடைபெறும்.

இந்த ஆண்டு, உற்சவத்தின் போது காலையும் மாலையும் உலக நன்மைக்காகவும் கொரோனா விலக வேண்டியும் சிறப்பு சங்கல்பம் நடைபெற்றுவருகிறது. நாளை மறுநாள் முதல் அம்பிக்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்பின் வைகாசி 26-ம் தேதி (9.6.21) அம்பிகை ஆஸ்தான பிரவேசம் நிகழும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தானர்.

அன்னையின் அருளால் உலகம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, மீண்டும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.



source https://www.vikatan.com/spiritual/temples/vaikasi-brahmotsavam-happening-in-kaalikambal-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக