Ad

செவ்வாய், 11 மே, 2021

'அவைத் தலைவர் - மேயர் - அமைச்சர்'- மா.சுப்பிரமணியனின் அரசியல் பயணம்!

2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராக பணியாற்றியபோது திறமையாக செயல்பட்டு, பாராட்டைப் பெற்றவர் மா.சுப்பிரமணியன். தற்போது கொரோனா தொற்று தமிழகத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதே திறமையான செயல்பாடுகளை எதிர்நோக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 61 வயதாகும் சுப்பிரமணியனுக்கு வாணியம்பாடிதான் சொந்த ஊர் என்றாலும், சைதாப்பேட்டைதான் அவரது அடையாளமே. சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும், பெங்களூர் ஹெவனூர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் பயின்றவர்.1976 ல் திமுகவில் சேர்ந்த மா.சுப்பிரமணியன், 1996-2006 வரையிலான காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணியின் துணை பொதுச் செயலாளரான இவர், கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்.

மாடித்தோட்டத்தில் மா.சுப்பிரமணியன்

2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராக பணியாற்றிய பின்னர்,மீண்டும் 2011 ல் நடந்த மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு,தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், 2021 தேர்தலிலும் இரண்டாவது முறையாக அதே சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அமைச்சராகி உள்ளார். உடற்பயிற்சி, யோகா, மாடித்தோட்டம் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர், ஏராளமான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-journey-of-health-minister-masubramanian

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக