Ad

வியாழன், 6 மே, 2021

கருணாநிதிக்கு ஒரு பேராசிரியர்... ஸ்டாலினுக்கும் ஒரு`பேராசிரியர்' - பொன்முடியின் அரசியல் பயணம்...

1989 ஆம் ஆண்டு அமைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தொடங்கி, 1996, 2006 ஆம் ஆண்டுகளில் அமைந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகஅமைச்சரவையிலும் மெத்தப் படித்த மேதாவி அமைச்சர் எனச் சொல்லும் வகையில்,எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்),பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி என முனைவர் பட்டம் வரை, பல பட்டமேற்படிப்புகளுக்குச் சொந்தக்காரர் பொன்முடி (எ) தெய்வசிகாமணி. பெயரைவிட நீளமான இந்தப் பட்டங்களை போட்டுத்தான் ஆரம்ப காலத்தில் தன்னைஅறிமுகப்படுத்திக்கொள்வார் பொன்முடி என்கிறார்கள் விழுப்புரம் உடன்பிறப்புகள். விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் 19 ஆம் தேதி பிறந்தவர் பொன்முடி. பொன்முடியுடன் பிறந்த சகோதர,சகோதரிகள் 8 பேர். அப்பா கந்தசாமி, சித்தலிங்கம் மடம் தொடக்கப் பள்ளியில்தலைமை ஆசிரியராக பணியாற்றிவர். தாய் மரகதமும் ஆசிரியையாகப்  பணியாற்றியவர்தான். பொன்முடிக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், பொன் கௌதமசிகாமணி. அடுத்தவர், பொன் அசோக் சிகாமணி. இருவருமே டாக்டர்கள்.17 ஆண்டு காலம் கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தவர் பொன்முடி.விழுப்புரம் கலைக் கல்லூரியில் பணியில் இருந்தபோது திராவிடர் கழகமேடைகளில் பேச்சாளராக அறிமுகமானவர். அரசியல் ஆர்வம் காரணமாக தனது பணியைராஜினாமா செய்து விட்டு, தி.மு.க-வில் சேர்ந்தார். முதன் முதலாக 1989 ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்முடி, சுகாதாரத் துறை அமைச்சராகநியமிக்கப்பட்டார். 1991 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

Minister Ponmudi

1996-ல் அதேவிழுப்புரத்தில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியில்  போக்குவரத்துறைஅமைச்சர் ஆனார். பின்னர் 2001, 2006 தேர்தல்களிலும் விழுப்புரம்தொகுதியில் வெற்றி பெற்றார். 2006-2011 தி.மு.க ஆட்சியின்போது,உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 2011 தேர்தலில்அ.தி.மு.க வேட்பாளர் சி.வி. சண்முகத்திடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறி, வெற்றிபெற்றார்.விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராகவும், மாநில திமுக துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் பொன்முடி, இந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராகிஉள்ளார்.ஒன்றுபட்ட தென் ஆற்காடு மாவட்ட திமுகவில் செல்வாக்குப் படைத்த தலைவராக வலம் வந்த செஞ்சி ராமச்சந்திரன், வைகோ திமுகவில் இருந்து விலகியபோதுஅவருடன் சென்றதால், விழுப்புர மாவட்ட திமுகவில் பொன்முடி கிடு கிடு வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்தது. கருணாநிதி கட்சித் தலைவராக இருந்தபோது காட்டிய அதே நெருக்கம்தான் தற்போது மு.க. ஸ்டாலினுடனும் உள்ளது. 'கலைஞருக்கு ஒரு பேராசிரியர் அன்பழகன். தளபதிக்கு ஒரு பேராசிரியர் பொன்முடி' என்று விழுப்புரம் உடன்பிறப்புகள் புகழும் அளவுக்கான அந்த நெருக்கம்தான், அவரை மாநில திமுக துணைப் பொதுச்செயலாளராகவும், அமைச்சராகவும் உயரம் தொட வைத்தது. அதே சமயம், மு.க.அழகிரி திமுகவில் கோலோச்சிய 2006-2011 தி.மு.க ஆட்சி காலத்தில்,அவருடனும் நெருக்கம் காட்டினார் பொன்முடி. தற்போது முதல் முறை அமைந்திருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும்  உயர்கல்வித்துறை   அமைச்சராக பதவியேற்றுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-journey-of-minister-ponmudi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக