Ad

புதன், 5 மே, 2021

கொரோனா தொற்று : நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்... அதிமுக கொடி வடிவமைப்பில் பங்காற்றியவர்!

ஏராளமான தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். அவருக்கு வயது 74.

கொரோனா பாதிப்பால் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டுவின் உடல்நிலை மோசமடைந்து இறந்திருக்கிறார்.

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் பெயரில் பெயர் பலகைகள் எழுதும் நிறுவனத்தை நடிகர் பாண்டு பல ஆண்டுகளாக நடத்திவந்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவர் பாண்டு.

நடிகர் பாண்டு

இந்த சம்பவம் பற்றி முன்னர் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் பாண்டு குறிப்பிட்டிருந்தார். ''எம்.ஜி.ஆர், தி.மு.க-வைவிட்டுப் பிரிஞ்சு, தனிக்கட்சி ஆரம்பிச்சப்போ, அரசியல் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து அடுத்து என்னனு யோசிச்சிக்கிட்டு இருந்தாங்க. நான் அங்கே ஒரு ஓவியனா கட்சியின் கொடியை வடிவமைச்சுக் கொடுத்தேன். அ.தி.மு.க கொடி நான் வடிவமைச்சதுதான். அதுக்கப்புறம் மெட்டல்ல லெட்டரிங் போர்டு வைக்கிறதை முதன்முதலா நான்தான் சென்னையில அறிமுகம் செஞ்சேன்.

நந்தனம் பெரியார் பில்டிங்குல இருக்குற உலோக எழுத்துகள் நான் வடிவமைச்சதுதான். அதன் பிறகு நிறைய ஆர்டர்கள் எனக்குக் கிடைச்சுது. `எழுத்துன்னா அது பாண்டுதான்’னு நல்ல பேர் வாங்கினேன்'' என்று சொல்லியிருந்தார்.

நடிகர் பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு என மூன்று மகன்கள் உள்ளனர்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/comedy-actor-pandu-died-due-to-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக