Ad

புதன், 5 மே, 2021

'தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: 137 டு 1,35,571 வாக்கு வித்தியாசங்கள் ஒரு பார்வை' #TNelections2021

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அதில், 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. 75 தொகுதிகள் மட்டுமே பெற்று அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது. வருகின்ற மே 7-ம் நாள் முதன்முறையாக ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க உள்ளது. இந்தநிலையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடைப்படையில், தமிழகத்திலேயே அதிக மற்றும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல் பத்து வேட்பாளர்களின் விவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்:

1. ஆத்தூர் தொகுதி

திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி. இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவைத் தோற்கடித்து, சுமார் 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும், தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

2. திருவண்ணாமலை தொகுதி

திமுக வேட்பாளர் எ.வ.வேலு. இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலை தோற்கடித்து, சுமார் 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

3. பூந்தமல்லி தொகுதி

திமுக வேட்பாளர் ஏ.கிருஷ்ணசாமி. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ராஜமன்னாரைத் தோற்கடித்து, சுமார் 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

4. எடப்பாடி தொகுதி

அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை தோற்கடித்து, சுமார் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும், அதிமுக-விலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5. திருச்சி மேற்கு தொகுதி

திமுக வேட்பாளர் கே.என்.நேரு. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாதனைத் தோற்கடித்து, சுமார் 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

கே.என்.நேரு

6. கொளத்தூர் தொகுதி

திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமைத் தோற்கடித்து, சுமார் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

7. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி

திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸாலியை தோற்கடித்து, சுமார் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

8. திருச்சுழி தொகுதி

திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூமுக வேட்பாளர் ராஜசேகரைத் தோற்கடித்து, சுமார் 60,992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

9. திருக்கோவிலூர் தொகுதி

திமுக வேட்பாளர் கே.பொன்முடி. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கலிவரதனை தோற்கடித்து, சுமார் 59,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

10. மண்ணச்சநல்லூர் தொகுதி

திமுக வேட்பாளர் எஸ்.கதிரவன். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதியை தோற்கடித்து, சுமார் 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள்:

1. தி.நகர் தொகுதி

திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி, 137 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். மேலும், தமிழகத்திலேயே மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

2. மொடக்குறிச்சி தொகுதி - பாஜக வேட்பாளர் சரஸ்வதி, 281 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை வீழ்த்தி, வெற்றிபெற்றுள்ளார்.

3. தென்காசி தொகுதி - காங்கிரஸ் வேட்பாளர் பழனி, 370 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

4. மேட்டூர் தொகுதி - பாமக வேட்பாளர் சதாசிவம், 656 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாளை வீழ்த்தி, வெற்றிபெற்றுள்ளார்.

5. காட்பாடி தொகுதி - திமுக வேட்பாளர் துரைமுருகன், 746 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வி.ராமுவை வீழ்த்தி, வெற்றிபெற்றுள்ளார்.

துரைமுருகன்

6. கிருஷ்ணகிரி தொகுதி - அதிமுக வேட்பாளர் அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செங்குட்டுவனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

7. விருத்தாசலம் தொகுதி - காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 862 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் கார்த்திகேயனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

8. நெய்வேலி தொகுதி - திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன், 977 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் ஜெகனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

9. ஜோலார்பேட்டை தொகுதி - திமுக வேட்பாளர் தேவராஜி, 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

10. கிணத்துக்கடவு தொகுதி - அதிமுக வேட்பாளர் தாமோதரன், 1,095 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் குறிஞ்சி பிரபாகரனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/highest-and-lowest-vote-difference-of-candidates-in-tamilnadu-assembly-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக