ஸ்டாலினுக்கு பன்னீர் செல்வம் கோரிக்கை!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று முந்தினம் நள்ளிரவு 11 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடே காரணமாக சொல்லப்பட்டது. இதனை மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ``செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது போன்ற துயரச்சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல்தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி, அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும். பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கவேண்டும். வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.
இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும். உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி இல்லை!
source https://www.vikatan.com/news/general-news/06-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக