ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குக்காக 15,000 ரூபாயை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெருகிவரும் கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்க முடியாமல் அரசும் மக்களும் போராடிவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் இறுதிச்சடங்கை நடத்த முடியாத அவலநிலையில் பலர் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் ஆந்திரப்பிரதேச அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச்சடங்கை நடத்துவதற்காக 15,000 ரூபாயை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் தலைமையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாது, "தற்போது வழங்கப்படும் இந்த நிதி, கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு என மாநில அரசால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து செலவீனங்களாகச் சேர்க்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ``ஆந்திராவின் சுகாதார மற்றும் குடும்பநல ஆணையர், தேவையான நிதியை மாநில அரசின் நிதியிலிருந்து அந்தந்த மாவட்டத்திலுள்ள நிதி வழங்கும் அதிகாரியிடம் வழங்குவார்’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/india/andhra-govt-to-give-rs-15000-for-funeral-expenses-of-covid-victims
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக