2. 5. 21 சித்திரை 19 ஞாயிற்றுக்கிழமை
திதி: சஷ்டி இரவு 8.57 வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூராடம் பகல் 2.37 வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம் பகல் 2.37 வரை பிறகு அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை
நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை/ பகல் 3.30 முதல் 4.30 வரை
சந்திராஷ்டமம்: ரோகிணி பகல் 2.37 வரை பிறகு மிருகசீரிடம்
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்க...
இல்லறமே நல்லறம் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படிப்பட்ட இல்லறத்தில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் இருக்கவேண்டியது அவசியம் அல்லவா... ஆனால் சில குடும்பங்களில் எப்போதும் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரை ஒருவர் மதிக்காமல் எடுத்தெரிந்துபேசுவதும் நடக்கும். இதனால் வீடே எப்போதும் போர்க்களமாகவே காணப்படும் . ஆனால் இந்நிலையை எளிதில் மாற்ற சில எளிய வழிகளைச் சொல்கிறது நம் ஆன்மிகம். அது குறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய சுருக்கமான ராசிபலன்
விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம் :
செலவு : செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் உண்டாகும். - செலவே சமாளி!
ரிஷபம் : தாமதம் : சின்னச் சின்னக் குழப்பங்கள் முற்பகலில் இருக்கும். செயல்களில் முடிவதிலும் சிறு தாமதம் ஏற்படும். ஆனால் பாதிப்பு ஏற்படாது. - தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது!
மிதுனம் : நிதானம் : முற்பகலில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிற்பகலுக்கு மேல் கவனம் தேவை. உறவினர்களால் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!
கடகம் : உற்சாகம் : உற்சாகமான நாள். மனதில் துணிவும் நம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளும் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். - ஆல் இஸ் வெல்!
சிம்மம் : உதவி : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாள். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். உணவில் மட்டும் கவனம் தேவை. அலர்ஜி, அஜீரணம் ஏற்படலாம். - டேக் கேர் ப்ளீஸ்!
கன்னி : ஆரோக்கியம் : குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஆலோசனை அவசியம். ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். - ஹெல்த் இஸ் வெல்த்!
துலாம் : நன்மை : நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். உற்சாகமாக இருப்பீர்கள். செலவுகளில் சிக்கனம் தேவை. முயற்சிகளுக்குக் குடும்பத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். - நாள் நல்ல நாள்!
விருச்சிகம் : தடை : செயல்களில் எதிர்பாராத சிறுசிறு தடைகள் ஏற்படும். அதேவேளை எதிர்பாராத பணவரவு உண்டாகும். உறவினர்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு நீங்கும். - தடை அதை உடை!
தனுசு : அனுகூலம் : அனுகூலமான நாள். கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். திட்டமிடுதலுக்காகக் குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவார்கள். - ஆல் தி பெஸ்ட்!
மகரம் : கவனம் : செயல்களைத் திட்டமிடல் அவசியம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் கொஞ்சம் மேம்படும் என்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். - கேர் ஃபுல் ப்ளீஸ்!
கும்பம் : பிரச்னை : நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். சகோதர வகையிலும் செலவுகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினர் உதவியாக இருப்பது ஆறுதலாக இருக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
மீனம் : மகிழ்ச்சி : குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும். உறவினர்களால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். பணவரவும் உண்டு. - என்ஜாய் தி டே!
source https://www.vikatan.com/spiritual/astrology/spiritual-remedies-for-the-unity-of-couples
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக