சொந்தமா முதலீடு செஞ்சு தொழில் செய்யறது ரிஸ்க்கா இருக்கும்னு நினைச்சு, இப்ப இருக்குற டெலிவரி கம்பெனிகள், இல்ல ஆன்லைன்ல பொருள் விக்கிற கம்பெனி, எம்.எல்.எம் எதிலாவது சேர்ந்து சம்பாதிக்கலாம்னு நினைச்சா, காலைல இருந்து நைட் வரைக்கும் வண்டி ஓட்டியே இடுப்பு ஒடியுது. சரி, எதாவது ஆன்லைன் கம்பெனில சேல்ஸ் பார்ட்னர்ன்னு ரெஜிஸ்டர் பண்ணிட்டு எதையாவது சேல் பண்ணலாம்னா பொருள் குவாலிட்டி இல்ல, எக்ஸ்சேஞ்ஜ், ரீஃபண்டுனு ஏகப்பட்ட பிரச்னை. எம்.எல்.எம், இன்சூரன்ஸ் கேக்கவே வேண்டாம்.
இது எல்லாத்துலயும் ஒரு விஷயம் கவனிச்சு பார்த்தீங்கன்னா, இந்த எல்லா கம்பெனியும், அதில் இணையும் நபர்களின் மூலமாத்தான் சம்பாதிக்கிறாங்க. அதுல ஒரு பங்கை அவங்களுக்கு கொடுத்துட்டு மீதிய அவங்க சர்விஸ் சார்ஜா எடுத்துகிறாங்க. இன்னொரு விஷயம் என்னென்னா, அந்த நபரின் திறமை என்னவா இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு நாள் முழுக்க இட்லி, தோசை பொட்டலத்தை கொண்டுபோய் குடுத்துட்டு வர வேண்டியதா இருக்கு. ஆனா அந்த வேலையைக் கொடுத்ததன் மூலமா, இத்தனை லட்சம் இளைஞர்களுக்கு நாங்க வேலை வாய்ப்பு கொடுத்துருக்கோம்னு அந்த நிறுவனங்கள் சொல்லுது!! நீங்க வேணும்னா, ஏதாவது ரோட்டுல ஓடிக்கிட்டு இருக்க ஃபுட் டெலிவரி பையன பிடிச்சு, அவங்களுக்கு பிடிச்சா இந்த வேலைய செய்யறாங்கனு கேளுங்க, 90% சொல்லுவாங்க "வேற வழி இல்ல சார், பண்ணுறோம்".
ஏன் வேற வழி இல்ல!? அதுக்கு அப்புறம் வருவோம். அதுக்கு முன்ன, அப்படியே இந்த பேஜை மினிமைஸ் பண்ணிட்டு கூகிள்ல தட்டுங்க. வேலை இல்லை, வறுமைன்னு ஒரு நாளைக்கு சராசரியா அறுபது இளைஞர்கள் இந்தியால தற்கொலை பண்ணிக்கிறாங்க! இந்த அறுபது பேருக்கும் எந்த ஒரு திறமையும் இல்லைனு நினைக்கிறீங்களா? உங்க பதில் "அதெப்படி, ஏதாவது ஒரு திறமை இருக்கும்ல" . "அப்டினா அவங்ககிட்ட இருக்குற திறமைக்கு சமுதாயத்திலே தேவையே இல்லையா? அதுவும் கிடையாது, தேவை எங்கயாவது கண்டிப்பா இருக்கும்ங்கிறதுதான் உண்மை. அப்போ பிரச்னை வேலை இல்லா திண்டாட்டம் இல்லை, வேலை எங்க இருக்குனு தெரியாத திண்டாட்டம்!!
தொழில் முனைவோர்னு ஆரம்பிச்சீங்க, இப்போ வேலை இல்லா திண்டாட்டத்தைப் பத்தி பேசுறீங்கனு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. தொழில்ன்றது தனி கம்ப சூத்திரமெல்லாம் இல்லைங்க. உங்ககிட்ட உபரியா இருக்குற பொருளையோ, இல்ல உங்க திறமையயோ தேவைப்படுறவங்களுக்கு கொடுத்து அதுக்கு மாற்றா பணமாக பெறுவது. இந்த வரையரைல என்ன சவால்னா, என்னோட திறமை யாருக்கு தேவைப்படுது? மார்க்கெட்டிங் பாஷைல யாரு என்னோட கஸ்டமர்?, அவங்க எங்க இருக்காங்க?, நான் எந்த வகைல அவங்கள ரீச் பண்ண முடியும்? என்னோட தொழிலுக்கு சொந்த வெப்சைட் அவசியமா?
இந்த எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தருது www.slowr.com அப்படிங்கற இந்திய ஸ்டார்ட் அப்!!. உங்களோட திறமை என்னவா இருந்தாலும் சரி. அது பாட்டோ இல்ல பரதமோ, படிக்க சொல்லி கொடுக்குறதோ இல்ல பறக்க சொல்லி கொடுக்குறதோ, சமையலோ இல்ல சாஃப்ட்வேரோ, நடிப்பு, மருத்துவம், விளையாட்டு, ஹோம் சர்விஸ், பண்டிதம், ஜோசியம், இன்னபிற எதுவாக இருந்தாலும், எல்லாமே ஃபிரீலான்சிங் பண்ணலாம், ஃபிரீலான்ஸிங் பண்ணும் ஒவ்வொருவரும் ஒரு தொழில் முனைவோரே.
மேலே பார்த்தது சேவை வகை. பொருள்கள் வகையிலேயும் தனிநபர் வருமானத்திற்கு இந்த ஆப் வழி செய்கிறது! உங்ககிட்ட பயனில்லாம, இல்ல எப்பவாவது பயன்படுத்துற பொருட்கள், அது காலி அறையோ, கார் பார்க்கிங் இடமோ, கார், பைக் இல்ல சைக்கிளோ, புத்தகம், கம்ப்யூட்டர், பண்ணை கருவிகள், எக்சர்சைஸ் எக்யுப்மென்ட்ஸ், இசைக் கருவிகள், இஞ்சினியரிங் டூல்ஸ் இப்படி எதுவா இருந்தாலும் சரி, அது உங்ககிட்டதான் சும்மா இருக்கு, அதே பொருளை நீங்க வசிக்கிற அதே நகரத்துல யாராவது சில நாட்களுக்கு தேவைன்னு தேடிட்டு இருப்பாங்க, அந்தப் பொருளையும் நீங்க அந்த ஆப்பின் மூலமா வாடகைக்குக் கொடுக்கலாம்.
மொத்தத்துல, நீங்க உங்களுக்கு பிடிச்ச வேலைய, பிடிச்ச நேரத்துல செஞ்சு சம்பாதிக்க முடியும், கூடவே உங்களுடைய பொருள்களும் உங்களுக்கு வருமானம் ஈட்டித் தரப்போகுது!!!
இந்த ஒரு வருஷ பேண்டமிக் சமயத்துல, 90% தொழில்கள் பாதிக்கப்பட்டது, இதே சமயத்துல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள், ஆன்லைன் விற்பனை, சோசியல் மீடியா, கேம்ஸ், வீடியோ சாட், ஆன்லைன் கல்வி என பல தொழில்கள் நல்ல வளர்ச்சி அடைஞ்சது, ஆனா பொதுவாக ரிசஷன் எனப்படும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் பொழுது அனைத்து வகையான ஆன்லைன் தளங்களுக்கும் விற்பனையில் மந்தம் வரலாம், ஆனால் இந்த slowr.com மூலம் ரிசஷன் சமயங்களில் இன்னும் வளர்ச்சி பெறலாம்! யோசிச்சு பாருங்க, ஃபேக்டரில லேஆஃப் கொடுத்த ஒருத்தருக்கு தன்னுடைய தனித்திறமை எதுவோ அதன் மூலம் தற்காலிக வருமானம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்கி தரும் பட்சத்தில்!!
இதுல, இந்தத் தளம் சிறப்பா செஞ்சுருக்குற ஒரு விஷயம், தன்னை தற்காலிக பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு உண்டான ஒரு ஆன்லைன் விளம்பர தளம் என்ற மட்டில் நிறுத்திக் கொண்டது. அதாவது நமக்கு ஒரு கார் வாடகைக்கு தேவைன்னா, அந்த கார் மாடல், போட்டோ, எந்த ஊரை சேர்ந்தது, என்ன வாடகை, வண்டியின் இன்னபிற சங்கதிகள், வண்டி ஓனரின் மொபைல் நம்பர் போன்ற விஷயங்களை இந்த தளத்தில பாக்கலாம், மத்தபடி வாடகை பேசுறது, பேமென்ட் பண்றது எல்லாமே அந்த வண்டி ஓனரோட தான். அதுல இந்த ஸ்டார்ட் அப் மூக்கை நுழைப்பதில்லை! அதிலும் மேலாக இந்த தளத்தை இலவசமாக பயன்படுத்தும் வசதியை தந்து இதன் மூலம் நீங்கள் தொழில் தொடங்க மனம் மட்டும் போதும் பணம்(முதலீடு) தேவை இல்லை என அடித்து சொல்வது... மேலும் தன்னுடைய தனித்தகுதியாக இந்த ஆப் கருதுவது, "பொருளோ இல்லை சேவையோ, அது மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் என்றால் மட்டுமே வாடகைக்கு கொடுக்க முடியும். நீங்க உங்க வீட்டை மாத வாடகைக்குதான் தருவீங்கன்னா உங்க விளம்பரம் ஏற்றுக்கொள்ளப்படாது, நீங்க மாத சம்பளத்துக்கு வேலை தேடுபவர்னா உங்கள் விளம்பரமும் பதிவேற்றப்படாது. இதன் மூலம், முழுக்க முழுக்க தற்காலிக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே ஆன ஒரே தளம் என்ற பெயரை அடைய நினைப்பது தெரிகிறது.
அந்த வகையில் ஆட்டோ, கார், கனரக வாடகை வாகன உரிமையாளர்கள், சர்விஸ் அப்பார்ட்மெண்ட் நடத்துவோர், கம்ப்யூட்டர், கேமரா வாடகை நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் வாடகை, மேடை நிகழ்ச்சிகள் சார்ந்த பொருட்களின் வாடகை நிறுவனங்கள் இந்த வெப்சைடில் இணையும் பட்சத்தில் தங்கள் தொழிலுக்கு ஒரு டிஜிட்டல் இணைய பக்கம் இலவசமாக கிடைப்பதோடு, கமிஷன் என்ற பெயரில் வருமானத்தில் எந்த இழப்பும் கிடையாது. மேலும் முழுநேர ஃபிரீலான்சிங் பண்ணும் நபர்களின் எண்ணிக்கையும் தோராயமாக இந்தியாவில் மட்டும் ஏழு கோடி பேர், இவர்களுக்கென்று ஒரு தனி தளம் இதுவரை உலகில் கிடையாது. அந்த இடத்தை நிரப்ப நினைப்பதையும் அறிய முடிகிறது. இதையே தன்னுடைய டேக் லைனிலும் இந்த ஸ்டார்ட் அப் "Rent Anything, Hire Anybody - Temporarily" என உறுதிப்படுத்துகிறது.
மேலும் இந்த லாக்டௌன் சமயத்திலும், சேவை தருபவரும், சேவை பெறுபவரும் சந்தித்துக்கொள்ள அவசியமில்லாத சாஃப்ட்வேர் சார்ந்த வேலைகள், ஆன்லைன் கோச்சிங், அனைத்து வகையான கன்சல்டிங், யோகா, ஜும்பா, இன்ன பிற ஆன்லைன் சேவைகள் செய்பவர்கள் இந்த ஆப்பில் ஒரு விளம்பரம் (Ad) போஸ்ட் செய்வதன் மூலம் அவர்களை இந்த நிமிடம் தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு சேவைகளைத் தர முடியும். போரடிக்கும் லாக்டௌன் பிரச்சனையும் இல்லை, வருமானத்துக்கும் ஒரு வழி!
ஸ்லோயர்னு இந்த தளத்துக்கு ப்ராண்ட் நேம் கொடுத்த இந்த நிறுவனர்கள், இதை "ஸ்லோயர் ரெவின்யுனுதான்" தன்னுடைய டிவி, ஃஎப்.எம் விளம்பரங்களில் சொல்றாங்க. அதாவது ஒருவர் அவருடைய ஃப்ரி டயத்துல தனக்குப் பிடிச்ச வேலையை செய்வதன் மூலமாவும், தன்னிடம் உள்ள பொருள்கள் மூலமாவும் கிடைக்கும் வருமானம் மெதுவாக, சீராக இருக்கும் என்பதையே ஸ்லோயர் ரெவின்யுனு பிராண்டிங் பண்றாங்க, மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால், "இதன் மூலம் உங்கள் திறமையை உலகிற்குச் சொல்ல முடியும், உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும், உங்களால் வருமானம் ஈட்ட முடியும், உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக்கொள்ள முடியும், சமூகத்தில் உங்களுக்கான மரியாதையை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்!!
எந்த ஒரு தொழிலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களின் ஏதாவது ஒரு பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்கும் பொழுது, அந்த தொழிலுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் உண்டு. அதனால்தான் மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வந்திருக்கும் இந்த ஸ்டார்ட் அப்'க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
source https://www.vikatan.com/news/miscellaneous/every-individual-is-an-entrepreneur