இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது, இப்போது 90 சதவீதம்வரை விலை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே நேரம் லிட்டர் 85 ரூபாயாக இருந்த சமையல் எண்ணெய் விலை, இப்போது 140 ரூபாயைத் தொட்டிருக்கிறது.
இந்திய விற்பனையாளர்கள் பிரான்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றனர். கோவிட்-19 பரவலால் அந்த நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது.
Also Read: `இனி கடுகு எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய் சேர்க்க தடை!' - FSSAI உத்தரவு
இந்தியா சமையல் எண்ணெய்க்குப் பெருமளவு இறக்குமதியை நம்பி இருப்பதாலும், கோவிட் காலத்தில் பாமாயிலில் இருந்து ரீஃபைண்ட் எண்ணெய்க்குப் பயனாளிகள் பெருமளவில் மாறியதாலும் தற்போதைய தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இறக்குமதிப் பற்றாக்குறையால் சமையல் எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. போலவே கடலை எண்ணெய் 95 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும், பாமாயில் 75 ரூபாயிலிருந்து 115 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.
வரும் நாட்களில் இந்த விலை உயர்வு தொடரும் என்று நம்பப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுவரும் பாமாயில் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/food/the-reason-behind-the-huge-rise-in-cooking-oil-price
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக