Ad

வியாழன், 18 மார்ச், 2021

வேட்புமனு தாக்கலின்போது பவர் கட்; கைகுலுக்கி கொண்ட பாஜக-காங்கிரஸ் வேட்பாளர்கள்! - தேர்தல் க்ளிக்ஸ்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் அரவக்குறிச்சி வேட்பாளர் அரைநிர்வாணமாக வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றபோது தடுத்து நிறுத்திய காவல்துறையினர்.
தாமரை மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை
வாக்கு எண்ணும் மையங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
காட்பாடி திமுக வேட்பாளர் துரைமுருகன் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வேட்புமனு தாக்கலின் போது பவர் கட் ஆனதால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் உறுதிமொழி ஏற்ற ஊட்டி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கணேஷ்.
ஊட்டி பா.ஜ.க., வேட்பாளராக போஜராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ வைத்தியநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும், என்.ஆர் காங்கிரஸ் தலைவருமான, ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை தலைமை தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு பாதுகாப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் சாராயக்கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்
நத்தம் ஆர்.விஸ்வநாதன் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலையிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே பூம்புகார் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ்யை ஆதரித்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்
திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களிக்கப்படும் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதனை அறியும் WPAT இயந்திரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை வடக்கில் நிற்கும் ம.நீ.ம கட்சி வேட்பாளர் தங்கவேலு வேட்புமனு தாக்கலுக்கு வந்திருந்த கமலஹாசன்
தொண்டாமுத்தூர் தொகுயில் சுயட்சையாக களம் காணும் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
கோவை தொண்டாமுத்தூரில் களம் காணும் திமுக வேட்பாளர் கார்திகேய சிவசேனாபதியுடன் தொண்டர்கள் படம் எடுத்துக்கொள்கின்றனர்.
திரு.ஓ.பன்னீர்செல்வம் திருவொற்றியூர் தேரடியில் திறந்த வேனில் வாக்கு சேகரிக்க வந்த போது காத்திருந்த மக்கள்.
திருவெற்றியூர் வேட்பாளர் திரு.குப்பன் மற்றும் மாதவரம் தொகுதி வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி ஆகிய இருவரையும் ஆதரித்து திரு.ஓ.பன்னீர்செல்வம் திருவொற்றியூர் தேரடியில் திறந்த வேனில் வாக்கு சேகரிக்க வந்தார்.
வேளச்சேரியில் அமமுக வேட்ப்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யும் டிடிவி தினகரன்
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பா.ஜ.க- காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களான பொன்.ராதாகிருஷ்ணன் - விஜய் வசந்த் நாகர்கோவிலி்ல் வேட்புமனு தாக்கலுக்கு வந்த இடத்தில் நேரில் சந்தித்து பேசி கை குலுக்கி கொண்டனர்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் தேர்தல் அலுவலர் மயில் அவர்களிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தேர்தல் அலுவலர் மயில் அவர்களிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தேர்தல் அலுவலர் அரவிந்த் அவர்களிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
பரமக்குடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் ப்ளக்ஸ்கள் ,ட்ரை சைக்கிளில் பொருத்தப்படும் மின் மோட்டார்களை அகற்றக்கோரி ட்ராபிக் ராமசாமி வலியுறுத்தி வருகிறார்.
பாளையங்கோட்டை சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ஜெரால்ட் வாக்கு சேகரிபின் போது வாக்காளர் ஒருவர் ஆசி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தேர்தல் அதிகாரியான ஜிவரேகாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளரும் மாவட்ட செயலாளருமான கணேஷ்ராஜா வை ஆதரித்து நடிகை விந்தியா நாங்குநேரி உட்பட்ட தொகுதியில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் இடையே திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் டீக்கடையில் தொண்டர்களுக்கு தேநீர் போட்டுகுடுத்தார்
மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி ஒத்தக்கடை நரசிக்கம் பெருமாள் கோயிலில் இருந்து தனது முதல் பிரசாரத்தை துவங்கினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் தன் தந்தைக்காக களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்க துவங்கினார்


source https://www.vikatan.com/news/politics/election-photo-collection-19-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக