42 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. கமல்ஹாசன், ஶ்ரீதேவி நடித்த சைக்கோ த்ரில்லரான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
1978-ல் வெளிவந்த இப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க நீண்ட நாட்களாகவே ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருந்தார் பாரதிராஜாவின் மகன் மனோஜ். அஜித், தனுஷ், ஆர்யா எனப் பலருக்கும் இவர் 'சிகப்பு ரோஜாக்கள்-2' படத்தின் கதையை சொல்லியிருந்தார். ஆனால், படத்தின் பணிகள் அடுத்தக்கட்டம் நோக்கி நகரவேயில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக இப்போது இந்தப் படத்தை பாரதிராஜாவே இயக்க, மீண்டும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கயிருக்கிறார்.
பாரதிராஜா சொன்ன 'சிகப்பு ரோஜாக்கள் - 2' ஸ்கிரிப்டுக்கு கமல்ஹாசன் ஓகே சொல்லிவிட்டாராம்.
தேர்தலுக்குப்பிறகு கமல்ஹாசன் நடிக்கயிருக்கும் 'விக்ரம்' படம் முடிந்ததும் இந்தப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீதேவி நடித்த கேரக்டரில் யாரை நடிக்கவைப்பது என்பதற்கான தேடல் தொடர்கிறது.
'சிகப்பு ரோஜாக்கள்' முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகத்துக்கும் இளையராஜாவே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதும் கொண்டாடப்படும் 'நினைவோ ஒரு பறவை' பாடல் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/kamal-haasan-likely-to-star-in-sigappu-rojakkal-sequel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக