ஆண்ட்ராய்டு மொபைல் சந்தையின் ப்ரீமியம் மொபைல் பிராண்டான ஒன்ப்ளஸின் அடுத்த மொபைல் வரும் மார்ச் 23-ம் தேதி வெளியாகிறது. இதனை ஒன்ப்ளஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது ஒன்ப்ளஸ். மார்ச் 23 அன்று இந்திய நேரப்படி இரவு 8.30-க்கு ஒன்ப்ளஸ் 9 மற்றும் ஒன்ப்ளஸ் 9 ப்ரோ ஆகிய இரண்டு மொபைல்களும் வெளியாகின்றன. இது முழுவதையும் விர்ச்சுவல் நிகழ்வாகத் திட்டமிட்டுள்ளது ஒன்ப்ளஸ்.
ஒன்ப்ளஸில் இதுவரை வெளியானதிலேயே ஃப்ளாக்ஷிப் மொபைலாக இதனை வடிவமைத்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ஒன்பளஸ் 9 மொபைல்களுக்கான கேமராக்களுக்கு ஸ்வீடன் நிறுவனமான ஹேசல்ப்ளாட் (Hasselblad) உடன் கைகோத்துள்ளது. ப்ரீமியம் போன்களுடன் ஒன்ப்ளஸ் பிராண்டு போட்டிப்போட்டு வந்தாலும், கேமரா விஷயத்தில் சற்று பின்தங்கியே இருந்தது. அதை ஈடுகட்டுவே தற்போது ஹேசல்ப்ளாட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை உள்ளே புகுத்தியுள்ளது.
ப்ரைமரி கேமராவுக்கு சோனியின் IMX789 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது அந்நிறுவனம். இதுவரை வெளியான ஒன்ப்ளஸ் மொபைல்களிலேயே இந்த 9 சீரிஸின் கேமாராக்கள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
45W பாஸ்ட் சார்ஜிங், 12GB Ram மற்றும் 256GB ஸ்டோரேஜ், Snapdragon 888 அல்லது Snapdragon 870 ப்ராசஸர்களுடன் புதிய 9 சீரிஸ் போன்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது Snapdragon 888 தான் தற்போது பயன்படுத்தப்படுவதிலேயே ப்ரீமியம் சிப்செட்டாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் வெளியான சாம்சங் கேலக்ஸி S21-ன் அமெரிக்காவில் வெளியான வேரியன்ட்களிலும்கூட இந்த சிப்செட்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
9 சீரிஸின் விலை ஒன்பளஸ் 8 சீரிஸை விட கொஞ்சம் அதிகமாகவும், சமீபத்தில் வெளியான சாம்சங் S21 சீரிஸை விடக் கொஞ்சம் குறைவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக 50,000 ரூபாய் அல்லது அதைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். இதோடு ஸ்வீட் சர்ப்ரைசாக ஒன்பளஸ் 9 சீரிஸுடன் இலவச இணைப்பாக ஒன்ப்ளஸ் இயர் பட்ஸூம் கொடுக்கப்போவதாக தகவல்கள் கசிகின்றன!
source https://www.vikatan.com/technology/gadgets/oneplus-9-series-smartphones-to-be-launched-on-march-23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக