Ad

திங்கள், 8 மார்ச், 2021

கொங்கு தொகுதிகளின் அ.தி.மு.க வேட்பாளர்கள் யார் யார்? - 34 பேர் கொண்ட உத்தேசப் பட்டியல்

முதற்கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி ஆறு வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், எம்.எல்.ஏ தேன்மொழி - நிலக்கோட்டை (தனி) தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க

தொடர்ந்து, அ.தி.மு.க தரப்பில் இருந்து மேலும் இருபது வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நமக்குக் கிடைத்த தகவல்களை செய்தியாக வெளியிட்டிருந்தோம். தற்போது, மேலும் 34 வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதை இங்கே பகிர்கிறோம்.

1. மடத்துக்குளம் - மகேந்திரன்

2. உடுமலைப்பேட்டை - ராதாகிருஷ்ணன்

3. திருப்பூர் வடக்கு - விஜயகுமார்

4. திருப்பூர் தெற்கு - நடராஜ்

5. திருச்செங்கோடு - பொன்னையன்

6. சேலம் மேற்கு - வெங்கடாசலம்

7. ஆத்தூர் (சேலம்) - சின்னதம்பி

8. ஓமலூர் - செம்மலை

திண்டுக்கல் சீனிவாசன்

9. திண்டுக்கல் - சீனிவாசன்

10. ஆத்தூர் (திண்டுக்கல்) - நத்தம் விஸ்வநாதன்

11. பழனி - ராஜரத்தினம்

12. கோவை வடக்கு - அருண்குமார்

13. சிங்காநல்லூர் - அம்மன் அர்ஜூனன்

14. மேட்டுப்பாளையம் - சின்னதம்பி

15. கவுண்டம்பாளையம் - கோவை செல்வராஜ்

16. ஊட்டி - கே.ஆர். அர்ஜூனன்

17. குன்னூர் - சரவணன்

18. கூடலூர் - மில்லர்

19. ஒரத்தநாடு - வைத்திலிங்கம்

20. தஞ்சை - சரவணன்

21. நன்னிலம் - காமராஜ்

22. வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன்

23. திருத்துறைப்பூண்டி - ராஜகோபால்

24. மயிலாடுதுறை - வி.ஜி.கே.செந்தில்நாதன்

வைத்திலிங்கம்

25. பாலக்கோடு - சிங்காரம்

26. ஓசூர் - ஜோதி

27. வேப்பனஹள்ளி - கோவிந்தராஜ்

28. தர்மபுரி - அன்பழகன்

29. பாப்பிரெட்டிபட்டி - பெ. பழனியப்பன்

30. அரூர் - இரா. முருகன்

31. ராசிபுரம் - சரோஜா

32. அவினாசி - தனபால்

33. கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

34. கிருஷ்ணராயபுரம் - ம. கீதா

அ.தி.மு.க தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆறு பேர் தவிர உத்தேச வேட்பாளர்களாக நமக்குக் கிடைத்த தகவலின்படி நாம் வெளியிட்ட 54 பேர் என இதுவரை அறுபது வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளைப் பார்த்திருக்கிறோம். இந்தநிலையில், அ.தி.மு.க போட்டியிடவிருக்கும் 171 தொகுதிகளில், சரிசமமாக தன் ஆதரவாளர்களுக்குத் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என ஓ.பி.எஸ் போர்க்கொடி உயர்த்த இன்று தலைமை அலுவலகத்தில் நடக்க வேண்டிய ஆலோசனைக் கூட்டம் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-proposed-candidate-list-for-34-constituencies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக