செயற்கையான நிறமிகள் சேர்க்காமல், இயற்கையான கலர்ஃபுல் உணவுகள்தாம் உங்களுக்கு இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷல்.
பச்சை மிளகாய் சட்னி
தேவையானவை:
பச்சை மிளகாய் - 10
புளி - ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - கால் கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
வறுத்த எள்ளுப் பொடி,
வறுத்த வேர்க்கடலைப் பொடி - 2 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். (தோல் கருகக் கூடாது) நன்கு வதங்கியவுடன் புளியும் உப்பும் போட்டுக் கலந்து கீழே இறக்கி விடவும். ஆறியவுடன் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
சிறிது நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த விழுது, எள்ளுப்பொடி, வேர்க்கடலைப் பொடி கலந்து சுடச்சுட, தோசை இட்லி முதலியவைகளுடன் சைடிஷாகப் பரிமாறவும்.
பரங்கிக்காய் கூட்டு
தேவையானவை:
நறுக்கிய பரங்கிக்காய் - 4 கப்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
விழுதாக அரைக்க:
துருவிய தேங்காய் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4
தயிர் (கெட்டியாக) - ஒரு கப்
Also Read: கறிவேப்பிலை தோசை | அவகாடோ சாண்ட்விச் | பயறு தினை பெலாபாத் - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes
செய்முறை:
பரங்கிக்காயைத் தோலெடுத்து, துண்டுதுண்டாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு தயிர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், கீழே இறக்கி வைத்து கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் முதலியவை தாளித்துப் பரிமாறவும்.
பீட்ரூட் சாலட்
தேவையானவை:
நறுக்கிய பீட்ரூட் - ஒரு கப்
வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
தயிர் - 2 கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
ஃபிரெஷ் க்ரீம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
சாலட் டிஷ்:
வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள், கடுகுப்பொடி - தலா ஒரு டீஸ்பூன் (இவை மூன்றையும் கலந்து வைக்கவும்).
செய்முறை:
நறுக்கிய பீட்ரூட்டை ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும். வேக வைத்த பீட்ரூட், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். ஃபிரெஷ் க்ரீமை தயிரில் கலந்துகொள்ளவும். பரிமாறும் முன் சாலட் டிஷ் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
Also Read: காரஞ்சாரமான கறுஞ்சுக்கா | `செம' வீட்டுக் கோழிக் குழம்பு - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes
source https://www.vikatan.com/food/recipes/green-chili-chutney-pumpkin-stew-and-beetroot-salad-colourful-recipes-for-weekend
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக