காஸிப்பூர் எல்லையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள்!
டெல்லியின் எல்லைகளில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 70 நாள்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள். அவர்கள் டெல்லிக்குள் நுழைந்துவிடாத வண்ணம், சாலைகளை முள்கம்பிகள் கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சை ஆனது. நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பினர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி எம்.பி-கள் காஸிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச சென்றனர். தமிழக எம்.பிக்களும் கலந்து கொண்டனர். ஆனால் போலீஸார் எம்.பி-களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையே டெல்லியின் சாலைகளில் ஆணிகள் கொண்டு வைக்கப்பட்டிருந்த தடுப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/04-02-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக