அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது! - நாராயணசாமி
பரபரப்பான சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று கூடியது. எம்.எல்.ஏ-க்கள் தொடர் ராஜினாமாவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று கூடிய பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அமைச்சரவையோடு நாராயணசாமி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
அப்போது பேசிய நாராயணசாமி, ``புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. கிரண் பேடி அளித்த நெருக்கடியைக் கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/general-news/22-02-2021-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக