Ad

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

திருச்சி: போலீஸாரின் ஸ்கெட்ச்... சிக்கிய `கஞ்சா’ ராணி! - ரெளடிகளுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை

திருச்சியில் கஞ்சாராணி என்று அழைக்கப்படும் தமிழ்செல்வியை, கஞ்சா விற்பனை செய்தபோது காந்தி மார்க்கெட் போலீஸார் கையும் களவுமாகக் கைது செய்தனர். இவர் மீது 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் மற்றும் பல ரெளடிகளையும் உருவாக்கி விடுகிறார் என்ற புகார்கள் உள்ளன. இவரை வெளியில் எடுக்க வழக்கறிஞர் முதல் அரசியல் கட்சி நிர்வாகி வரை சிலர் முயற்சி செய்கிறார்களாம்.

தமிழ்செல்வி

யார் இந்த தமிழ்செல்வி?

அமைதியான நகரம் என்று பெயர் எடுத்திருந்த திருச்சி மாநகர், சமீபகாலமாகவே கஞ்சா மற்றும் குட்காவின் கூடாரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் கஞ்சா, குட்கா, உள்ளிட்ட போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறன. பள்ளி மாணவர்கள் பலர் இப்போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவருகின்றனர். இந்த போதைப்பொருட்களால் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.

தமிழ்ச்செல்வியின் குடும்பத்தினர்

இதனைத் தடுக்க மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் கஞ்சாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தனி டீம்மை உருவாக்கி, போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுக்குள் வைக்க, நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன்

இந்தநிலையில், சூரன் சேரியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி தமிழ்செல்வி மற்றும் அவரது மகன், மகள் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர் போலீஸார்.

வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ``திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய `கஞ்சா’ ராணி என்று அழைக்கப்படும் தமிழ்செல்வி கஞ்சா விற்றபோது காந்தி மார்க்கெட் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது கையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்ததது. மதுரை, தேனி மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளிலிருந்து கஞ்சை வாங்கிவந்து திருச்சி முழுவதும் சப்ளை செய்கிறார்கள்.

பவன்குமார் ரெட்டி

கஞ்சா விற்பனையில் திருச்சியைத் தான் முக்கிய இடமாகக் கருதுகிறார்கள். காந்தி மார்க்கெட் இங்கு உள்ளதால் வியாபாரிகள் முதல் பள்ளி மாணவர்களுக்கும் எளிதாக சப்ளை செய்கிறார்கள். இவர்களைப்பற்றி யாராவது தகவல் கொடுத்தால், அவர்கள் கூடவே வைத்திருக்கும் ரெளடிகளை கொண்டு மிரட்டுவது, அடிதடியில் ஈடுபடுவது என்று செயல்பட்டு வந்தனர். அவர்கள் மீது பல வழக்குகள் இருக்கின்றன. இவர்களுடன் இருக்கும் ரெளடிகள் வெளியில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் அவரின் இரண்டு மகன்கள், மகள் சூர்யா ஆகியோரை கைதுசெய்துள்ளோம்.

கோட்டை ஏ.சி. ரவி அபி ராம்

சூர்யாவின் கணவரான அசோக் என்பவர் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறார். அவர் தான் இவர்களுக்குப் பின்புலமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களை போலீஸார் கைது செய்துவிட்டால், இவர்களை வெளியில் கொண்டுவருவதே இந்த அசோக் தான். கட்சியில் இருந்துக்கொண்டு எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று போலீஸ்காரர்களே மிரட்டிக்கொண்டு திரிபவர். கமிஷனர் லோகநாதன் மற்றும் மாநகர துணை ஆணையராக இருக்கும் பவன்குமார் ரெட்டி ஆகியோர், `இதுபோன்ற விவகாரத்தில் யார் ஈடுபட்டாலும் கட்சிக்காரர்களோ, வழக்கறிஞர்களோ யார் வந்தாலும் எதற்காகவும் அஞ்சவேண்டாம்’ என எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் இவரைக் கைது செய்யமுடிந்தது.

இன்ஸ்பெக்டர் சுகுமார்

இவர்களைக் கைது செய்ததால் பலதரப்பிலிருந்து போன்கால்கள் வந்தது. உடனே தலைமைக்குத் தெரியப்படுத்தி சிறையில் அடைத்தோம்" என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் குமார், ``ரெளடிகளின் அரஜாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். திருச்சி ஆணையாராக லோகநாதன் பதவி ஏற்றபிறகு போதைப்பொருட்கள் புழக்கம் குறைந்துள்ளது. அதற்கு எங்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தற்பொழுது கூட ராம்ஜி நகர், சங்கிலியாண்டபுரம், காஜா பேட்டை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கஞ்சா புழக்கத்தில் இருக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும். ஒவ்வொருமுறையும் போலீஸார் தான் கஞ்சாவை பிடிக்கிறார்கள்.

கஞ்சா பொட்டலங்கள்

இதற்கென்று இருக்கும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அதிகாரிகளும் திருச்சியில் சரியாகச் செயல்பட்டால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். இவர்களும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாகச் செயல்படுவதால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பெருகுவதைத் தடுக்கமுடிவதில்லை" என்று ஆவேசப்படுகிறார்.



source https://www.vikatan.com/news/crime/trichy-police-arrested-cannabis-selling-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக