Ad

சனி, 20 பிப்ரவரி, 2021

ரஜினி வீட்டில் கமல்... மக்கள் நீதி மைய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்டாரா?!

நடிகரும், மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப்பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டப்பிறகு 'அரசியலில் இருந்து விலகுகிறேன்' என அறிக்கைவிட்டு வெளியே எங்கும் வராமலேயே இருந்தார் ரஜினி.

கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப்பிறகு கடந்தவாரம் இளையராஜாவின் புது ஸ்டுடியோவுக்குத் தொடர்ந்து இரண்டு நாட்களாக சென்று வந்தார் ரஜினி. இந்நிலையில்தான் இன்று காலை கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை நேரில்சென்று சந்தித்திருக்கிறார்.

ரஜினி - கமல்

மக்கள் நீதி மைய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு விழா நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நிகழ்ந்திருக்கும் இச்சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கமல் தரப்பில் இச்சந்திப்பு குறித்து விசாரித்தபோது, ''இது முழுக்க முழுக்க நலம் விசாரிப்பு சந்திப்புதான். கொரோனா பரவலுக்குப்பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவேயில்லை. அதனால் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக்கொள்ளவே இருவரும் சந்தித்தார்கள். இதில் எந்த அரசியல் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. மிகக்குறைவான நேரமே ரஜினி வீட்டில் கமல் இருந்தார்'' என்றார்கள். இச்சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/kamal-haasan-visits-rajnikanth-before-makkal-needhi-maiyam-anniversary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக