Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

ஹைதராபாத்: கூட்டுப் பாலியல் வன்கொடுமை; போலியான புகார்! - மாணவி தற்கொலையால் அதிர்ச்சி

தெலங்கானா மாநிலம் கட்கேசர்(Ghatkesar) பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை சிலர் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

சி.சி.டி.வி பதிவு

மாணவி பயணித்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்து ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தினர். இந்த விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குழு விசாரணையில் ஈடுபட்டு வந்தது.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த பெண்ணின் புகாரின் படி, அவர் வீட்டுக்கு ஆட்டோவில் வரும் போது தான் இறங்க வேண்டிய இடத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிடாமல் வேகமாக சென்றதாகவும், அதன் பின் சிலர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ராச்சகொண்டா காவல்துறையினர்

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணை, கிடைக்கப்பெற்ற சி.சி.டி.வி பதிவுகள், தடயவியல் விசாரணை, அந்த மாணவியிடம் நடத்திய மருத்துவ பரிசோதனை முடிவுகளில் அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கவில்லை என்பதும், மாணவி பொய்யான புகாரைக் கூறியிருப்பதாகவும் காவல்துறை உறுதிசெய்தது.

இந்த பிரச்னை குறித்து ராச்சகொண்டா (Rachakonda) காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத் (Mahesh Bhagwat), ``கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அந்த புகாரின் அடிப்படையில் எங்கள் காவல்துறையினர் இரவு பகல் என்று விடாது விசாரணை மேற்கொண்டனர். கீசரா காவல் நிலைய எல்லையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தெரிவித்திருந்தார். விசாரணையில், அந்த பெண்ணை யாரும் கடத்தவில்லை, பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்பது உறுதியானது" என்றார்.

காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத்

தொடர்ந்து பேசியவர், ``கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது. அந்த பெண் வீட்டில் சந்தோசமாக இல்லை என்பதாலும், வீட்டிலிருந்து வெளியே செல்லவேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு பொய்யான புகாரை வழங்கியுள்ளார். முழுமையாக இது ஒரு சித்தரிக்கப்பட்ட புகார். விசாரணை முடிவுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Also Read: ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: பெரும் சதி இருப்பதாக வழக்கை முடித்துவைத்த உச்ச நீதிமன்றம்!

இந்த நிலையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகார் வழங்கிய மாணவி தனது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். "இது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால், முழு விசாரணைக்குப் பின்னரே விவரங்களைத் தெரிவிக்க முடியும்” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/hyderabad-student-commits-suicide-after-filing-fake-complaint-of-gang-rape

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக