Ad

புதன், 3 பிப்ரவரி, 2021

மதுரை: `கொரோனா தடுப்பூசியால் தூய்மைப் பணியாளர் மரணமா?!’ - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் சின்னம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த மனோகரன், புதூர் பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் அருப்புக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று வலிப்பு வந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

முன்கள தூய்மைப் பணியாளரான மனோகரன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் மரணம் நிகழ்ந்தது என குடும்பத்தினரால் புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் மரணமடைந்த மனோகரன் மனைவி அம்பிகா தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று முறையீடு செய்தார்.

வழக்கறிஞர் அழகுமணி

''கடந்த 21-ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 30-ம் தேதி அருப்புக்கோட்டையில் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் மரணமடைந்துள்ளதாக அவர் குடும்பத்தினர் புகார் எழுப்பியுள்ளனர். அவர் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால், உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில் தூய்மைப் பணியாளரின் உடலை மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்யவும். இறப்புக்கான காரணத்தை கண்டறியவும், குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்றும் முறையிட்டார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, ''இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய'' உத்தரவிட்டுள்ள நிலையில், இதுபற்றி வழக்கறிஞர் அழகுமணியிடம் பேசினோம், ''இம்மனு இன்று விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணை மூலம் கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்கள் களையப்படும்'' என்கின்றனர்.



source https://www.vikatan.com/news/judiciary/corona-vaccine-case-filed-in-high-court-bench

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக