Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

உங்கள் ஸ்டார்ட் அப்-க்கான வென்ச்சர் ஃபண்டிங்... வழிகாட்டுகிறது நாணயம் விகடன்!

தொழில்நுட்பம் பற்றிய படிப்புகளை நன்கு படித்த இன்றைய இளைஞர்களின் பெருங்கனவாக இருக்கிறது, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். தாங்கள் நிபுணத்துவம் பெற்ற ஒரு துறையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக வளர்த்தெடுத்துவிட்டால், கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின் கனவுக்குக் காரணம்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை எப்படித் தொடங்குவது என்கிற கேள்வி இன்றைக்குப் பலருக்கு இருக்கிறது. குறிப்பாக, கல்லூரிகளில் படிக்கிற மற்றும் படித்து முடித்த மாணவர்களிடம் இருக்கிறது. காரணம், ஸ்டார்ட் அப் பற்றி அவர்கள் பொதுவாக கேள்விப்பட்டு இருக்கிறார்களே தவிர, எந்தெந்தத் துறைகளில் எல்லாம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பல இளைஞர்களிடமும் தெளிவான சிந்தனை இல்லை.

ஸ்டார்ட்-அப்

மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் ஸ்டார்ட் அப் சூழலுக்கு ஓரளவுக்குப் பழக்கப்பட்டு இருப்பதால், அதை சட்டென்று புரிந்துகொண்டு, அதற்குத் தயாராகிறார்கள். ஆனால், சென்னையில் அந்தச் சூழல் ஓரளவுக்கே இருக்கும் நிலையில் (தமிழகத்தின் பிற நகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்தச் சூழல் மிகவும் குறைவு!) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இன்றைக்கு அதிகமாகவே இருக்கிறது.

ஸ்டார்ட் அப்-க்கான வெறும் ஐடியா மட்டும் இருந்தால் போதாது; அதற்கான பிசினஸ் பிளான் கட்டாயம் இருக்கவேண்டும். என்ன மாதிரியான புதிய பொருளை அல்லது சேவையை நாம் உருவாக்கப் போகிறோம், அதை எப்படி மார்க்கெட் செய்யப் போகிறோம், லாபம் எந்த அளவுக்கு இருக்கும், எதிர்காலத்தில் அதற்கான தேவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்தும் தெளிவான பிளான் இருக்கவேண்டும்.

business

இந்த இரண்டும் இருந்தாலும் புதிதாக உருவாக்கப்படும் சேவை அல்லது பொருளை உற்பத்தி செய்ய மூலதனத்துக்கு எங்கே செல்லப்போகிறோம் என்பது முக்கியமான கேள்வி. இந்த இடத்தில்தான் வென்ச்சர் கேப்பிட்டல் என்கிற நிறுவனங்கள் வருகின்றன. ‘வித்தியாசமான தொழில் ஐடியா உங்களிடம் இருக்கிறதா, எங்களிடம் வாருங்கள். உங்கள் கனவை நிஜமாக்க நாங்கள் முதலீடு செய்கிறோம்’ என்று அழைப்பு விடுப்பவைதான் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்களிடமிருந்து தொழில் மூலதனம் பெறுவது எப்படி, எவ்வளவு பணத்தை மூலதனமாகப் பெறமுடியும், அவர்கள் தரும் தொழில் முதலீட்டுக்கு பதிலாக நாம் என்ன தரவேண்டும், அவர்கள் செய்த முதலீட்டை அவர்கள் திரும்ப எப்படி எடுப்பார்கள் என்பவை எல்லாம் முக்கியமான கேள்விகள்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதாக அமையவிருக்கிறது வருகிற திங்கள்கிழமை மாலை அன்று நாணயம் விகடன் நடத்தவிருக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன, வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடமிருந்து தொழில் மூலதனத்தைப் பெறுவது எப்படி என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லப் போகிறார் கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவக்குமார்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கும் சிவக்குமார், வங்கிக் கடன், தொழில் நிறுவனங்கள் சந்தையில் நிதி திரட்டுவது உள்பட பல பணிகளைச் செய்வதில் தேர்ந்தவர்.

Sivakumar

ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தவேண்டும் என்று நினைப்பவர்கள், கல்லூரியில் படிக்கும்/படித்த மாணவர்கள், வித்தியாசமாக யோசித்து வெற்றி காணத் துடிப்பவர்கள் என எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை. https://events.vikatan.com/162-leaders-meet--sivakumar-/ என்கிற லிங்க்கைக் கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம்.

இந்த அரிய நிகழ்ச்சியை எல்லோரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்!



source https://www.vikatan.com/business/finance/nanayam-vikatan-guides-you-to-get-venture-funding-for-your-startup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக