12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி, தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.
source https://www.vikatan.com/news/general-news/16-11-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக